வருவாய் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க நகர்மன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
நாமக்கல், ஆக.27- பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத வருவாய் அலுவ லர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராசிபுரம் நகர் மன்றக் கூட்டத்தில் கவுன்சி லர்கள் வலியுறுத்தினர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகர்மன்றக் கூட் டம், நகராட்சி அலுவலக கூட்டரங்கில் செவ் வாயன்று, தலைவர் ஆர்.கவிதா சங்கர் தலைமையில் நடைபெற்றது. ஆணையர் (பொ) கோபிநாத் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் பேசுகையில், நகராட்சி வருவாய் பிரிவில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால், பொதுமக்களுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப் பட்டுள்ளோம். இதேபோல, முதலமைச்ச ரின் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அளிக்கப்பட்ட மனுவின் மீது எந்தவித நட வடிக்கையும் எடுக்காமல் வருவாய் ஆய்வா ளர் காலதாமதம் செய்து வருகிறார். எனவே, மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத வருவாய் பிரிவினர் மீது உடனடியாக நடவ டிக்கை எடுக்க வேண்டும், என்றனர். மேலும், தூய்மைப் பணியாளர்கள் வார்டுக ளுக்கு போதிய அளவில் வருவதில்லை. இதனால் குப்பைகளை அப்புறப்படுத்து வதில் காலதாமதம் ஏற்படுகிறது. மேலும், தெருநாய்கள் அதிகரித்து காணப்படுவதால், மக்கள் சாலைகளில் நடமாடுவதற்கு அஞ் சும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை கட்டுப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற னர். இதன்பின் பேசிய நகர்மன்றத் தலைவர் ஆர்.கவிதா சங்கர், நகராட்சி வரிவசூல் செய் வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும், தினசரி காய்கறிச் சந்தை உள்ளிட்டவற்றில் ஏலம் விடுவதில் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில், செயல் பட்டு வரும் நகராட்சி வருவாய் ஆய்வாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தகுதி யற்ற சிலரின் செயல்களால் நகராட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது, என்றார். இதைத் தொடர்ந்து, பல்வேறு திட்டப் பணிகளை அமல்படுத்துவது உள்ளிட்ட 16 தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.