tamilnadu

விலைவாசி உயர்வுக்கும், வரி உயர்வுக்கும் காரணம் ஊழல்

விலைவாசி உயர்வுக்கும், வரி உயர்வுக்கும் காரணம் ஊழல்

லோக் ஆயுக்தா உறுப்பினர் ராமராஜ் பேச்சு

நாமக்கல், ஜூலை 6- விலைவாசி உயர்வுக்கும், வரி  உயர்வுக்கும் முக்கியமான காரணம்  என்பது ஊழல் என லோக் ஆயுக்தா  உறுப்பினர் வீ.ராமராஜ் தெரிவித்துள் ளார். நாமக்கல் கோழிப்பண்ணை நகர  ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகி கள் பதவியேற்பு விழா சனியன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு  விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பி னர் வீ.ராமராஜ் பேசுகையில், மக்க ளிடையே ஊழல் எதிர்ப்பு விழிப் புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஒவ் வொரு நாட்டிலும் உள்ள,  பல்வேறு துறைகளும், அரசாங் கத்தை நடத்துவதற்காக கோடிக் கணக்கான ரூபாய்களை, பொருட் களையும், சேவைகளையும் வாங்க (procurement) செலவு செய்கிறது. இதற்காக செலவிடப்படும் தொகை  மக்கள் செலுத்தும் வரி உள்ளிட் டவை மூலமாக கிடைக்கும் பணமா கும். அரசுக்கு தேவையான பொருட் களையும், சேவைகளையும் கொள் முதல் செய்வதில் ஊழல் ஏற்படுமா னால் மக்கள் மீது கூடுதலாக வரி  விதிக்க வேண்டிய நிலைமை ஏற்படு கிறது. இதனால் ஏழை மற்றும் நடுத் தர மக்கள் கடுமையாக பாதிக் கப்படுகிறார்கள். சாலைகளை அமைத்தல், பாலங்களை கட்டுதல்,  வீட்டு வசதிகளை உருவாக்குதல், குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்தல்  போன்ற பல மக்கள் நல்வாழ்வு திட்டங்களுக்கு அரசு ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாயை செலவழிக்கிறது. இந்தத் திட்டங்களை செயல்படுத்துவதில் ஊழல் நடைபெறும் போது ஏற்படும் கூடுதல் செலவானது மக்களின் தலையில் ஏற்றப்படுகிறது. ஏழை மக்களுக்காக செயல்படுத் தப்படும் திட்டங்களில் ஊழல் ஏற்ப டும் போது இத்தகைய மக்கள் நலத்  திட்டங்கள் சரியான பயனாளிக ளுக்கு செல்லாமல் மக்கள் பாதிக்கப் படுகிறார்கள். அரசின் பல்வேறு துறைகளிலும், அரசால் நடத்தப்ப டும் பல்வேறு அமைப்புகளிலும், அரசு உதவி பெறும் அமைப்புக ளிலும் ஒவ்வொரு ஆண்டும் பலர்  ஓய்வு பெறுகிறார்கள். இந்த காலிப்  பணியிடங்களை நிரப்ப பணியாளர் தேர்வு நேர்மையாக நடைபெறாமல், லஞ்சம் பெற்றுக் கொண்டு பணி யாளர்கள் நியமிக்கப்படும் போது  திறமையான நபர்களுக்கு வாய்ப்பு  பறிபோகிறது. மேலும், லஞ்சம் கொடுத்து வேலைக்கு வரும் அரசு  பணியாளர்களும் கொடுத்த  லஞ்சத்தை மீட்டெடுக்கும் எண்ணத் தில் நேர்மையற்றவர்களாக செயல் படக்கூடிய நிலைமை ஏற்படுகிறது. ஒரு பணியை செய்வதற்கு லஞ் சம் வாங்குதல் அல்லது சட்டப்படி செய்ய வேண்டிய கடமையை செய் யாமல் இருப்பதற்கு லஞ்சம் வாங்கு தல் ஆகியவை காரணமாக நேர்மை யற்ற நிர்வாகம் ஏற்படுகிறது. நாம்  ஒவ்வொருவரும் நேரடியாக பல  வரிகளை செலுத்துகிறோம். வாங் கும் ஒவ்வொரு பொருளின் மூல மாகவும் மறைமுக வரிகளை செலுத்துகிறோம். ஊழல் அதிகரிக் கும் போது வரி உயர்வும், விலை வாசி உயர்வும் ஏற்படுகிறது. விலை வாசி உயர்வும் வரி உயர்வும் ஏழை  மற்றும் நடுத்தர மக்களிடையே அமைதியற்ற சூழலை உருவாக்கு கிறது. மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு ஊழல் மிகப்பெரிய எதிரியாகும். எந்த ஒரு சட்டம் இயற் றப்பட்டாலும் எந்த ஒரு அமைப்பு  ஏற்படுத்தப்பட்டாலும் அவை குறித்த  விழிப்புணர்வு மக்களிடையே இல் லாவிட்டால் அந்தச் சட்டத்தாலும் அந்த அமைப்பாலும் எந்த பயன் களையும் உருவாக்க முடியாது. ஊழலை ஒழிக்கும் உயர்நிலை அமைப்பான தமிழ்நாடு லோக் ஆயுக்தா பற்றி தமிழக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது தன்னார்வ அமைப்புகள், கல்வி நிறு வனங்கள், சமூக செயல்பாட்டாளர் களின் கடமையாகும், என்றார்.