tamilnadu

img

கார்ப்பரேட் நிறுவனங்களே, விவசாயத்தை விட்டு வெளியேறு!

கார்ப்பரேட் நிறுவனங்களே, விவசாயத்தை விட்டு வெளியேறு!

விவசாயிகள் சங்கத்தினர் முழக்கம்

நாமக்கல், ஆக.13- ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் 83 ஆம் ஆண்டு முன் னிட்டு, ‘கார்ப்பரேட் நிறுவனங் களே, இந்திய விவசாயத்தை விட்டு  வெளியேறு’ என்ற முழக்கத்தை வைத்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தில்லியில் நடைபெற்ற விவசா யிகளின் 13 மாத போராட்ட நிறை வின்போது, விவசாயப் பொருட் களுக்கு குறைந்தபட்ச ஆதார  விலை தீர்மானப்பதற்கான குழு  அமைப்பதாக விவசாய சங்கங்களி டம் ஒன்றிய அரசு வாக்குறுதி அளித் தது. ஆனால், மறுபுறம் மூன்று வேளாண் சட்டங்களை கொள்ளைப் புறம் வழியாக கொண்டு வருவ தற்கான, மசோதாக்களை நாடாளு மன்றத்தில் ஒன்றிய அரசு கொண்டு  வந்தது. மேலும், மின்சாரத்து றையை தனியார் மயமாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. ‘சுதந்திர வர்த்தகம்’ என்ற பெயரில் அமெரிக்க அரசோடு வர்த்தக உடன் பாடு செய்து கொண்டு, வெளிநாட்டி லிருந்து மீன்வளம், பால் பொருட் கள், பருப்பு, சோயாபீன்ஸ், தானி யங்கள் உள்ளிட்ட பொருட்களை இந்தியாவில் இறக்குமதி செய்வ தற்கு முழுமையான சுங்க வரியை நீக்க உத்தேசித்து வருகிறது. இதன் காரணமாக இந்திய வேளாண்மை கடுமையாக பாதிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. இச்சூழலில் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் நடைபெற்ற 83 ஆவது ஆண்டு முன்னிட்டு, ‘கார்ப்பரேட் நிறுவனங்களே இந் திய விவசாயத்தை விட்டு வெளி யேறு’ என்ற முழக்கத்தை முன் வைத்து புதனன்று விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். போராடி பெற்ற தொழிற் சங்க உரிமைகளை பறிக்கும் ஒன் றிய அரசின் நடவடிக்கைகளை கண் டித்தும், இந்தியாவில் அமெரிக்க வேளாண் பொருட்களை இறக்கு மதி செய்வதை அனுமதிக்கக் கூடாது. இந்திய விவசாயத்தை பாதுகாக்க வேண்டும். நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் முடிவை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகள் வலியுறுத்தப்பட்டன. நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு அண்ணா சிலை முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, விவசா யிகள் சங்க மாவட்ட துணைத்தலை வர் கே.பூபதி தலைமை வகித்தார். இதில் சங்கத்தின் மாவட்டத் தலை வர் ஏ.ஆதிநாராயணன், சிஐடியு நிர் வாகி செங்கோடன், கரும்பு விவசா யிகள் சங்க மாவட்டத் தலைவர் நல்லாக்கவுண்டர், வாலிபர் சங்க  முன்னாள் தலைவர் எஸ்.சீனிவா சன், ஏஐடியுசி மாவட்டத் தலைவர் எஸ்.ஜெயராம், செயலாளர் தன சேகர், தமிழ்நாடு விவசாயத் தொழி லாளர் சங்க எம்.செல்வராஜ், விவ சாயத் தொழிலாளர் சங்க மாநில துணைத்தலைவர் சி.துரைசாமி, உயர்மின் கோபுர எதிர்ப்பு இயக் கத்தின் தலைவர் செல்லமுத்து உட் பட பலர் கலந்து கொண்டனர். ஐக்கிய விவசாயிகள் முன்னணி (SKM) சார்பில் எருமப்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, விவசாய சங்க மாவட்ட நிர்வாகி எஸ்.கே.சிவச்சந்திரன் தலைமை வகித்தார். இதில், சங்கத்தின் மாநி லச் செயலாளர் பி.பெருமாள், மாவட்ட உதவித்தலைவர் மு.து. செல்வராஜ், நிர்வாகி பி.வி.சிவக் குமார், எஸ்கேஎம் போராட்டக்குழு தலைவர் கே.தங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.