தெருநாய்களை கட்டுப்படுத்திடுக: விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல், செப்.2- பொதுமக்களை அச்சுறுத்தி வரும் தெருநாய்களை கட்டுப்ப டுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், எருமப் பட்டி பேரூராட்சி பகுதியில் நாளுக்கு நாள் தெருநாய்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத் தல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சாலையில் நடந்து செல்வோரையும், பள்ளி செல்லும் குழந்தைகளையும் தெருநாய்கள் துரத்திச் சென்று கடித்து வருவதால், அனைத்து தரப்பி னருமே கடும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். எனவே, தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தினர் திங்களன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் ஒன் றியத் தலைவர் மு.து.செல்வராஜ் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் சிவச்சந்திரன் முன் னிலை வகித்தார். மாவட்டச் செய லாளர் பி.பெருமாள், கோரிக்கை களை வலியுறுத்தி பேசினார். இதில் அப்பகுதி பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.