போனஸ் கேட்டு கட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு, அக்.14- நலவாரியத்தில் பதிவு செய் துள்ள அனைவருக்கும் போனஸ் கேட்டு சிஐடியு கட்டுமானத் தொழி லாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தீபாவளி பண்டிகை போனசாக ரூ.5000 வழங்க வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய் வூதியத்தை ரூ.3000 ஆக உயர்த்த வேண்டும். ஓய்வூதியம் பெறும் தொழிலாளிக்கும் இயற்கை மரண நிவாரணம் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி சிஐடியு கட்டுமானத் தொழிலா ளர் சங்கத்தினர் ஈரோடு நலவாரிய அலுவலகம் முன்பு செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட் டத் தலைவர் என்.முருகையா தலைமை வகித்தார். சிஐடியு மாவட் டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன் சிறப் புரையாற்றினார். சங்கத்தின் மாவட் டச் செயலாளர் ஆர்.நடராஜ், பொரு ளாளர் கே.பழனிசாமி, துணைத் தலைவர்கள் சி.கே.முருகேசன், ஏ.பி. மாதவன், ஆர்.சரோஜா, ஏ.மணி, துணைச்செயலாளர்கள் கே.சசி குமார், டி.வேங்கையம்மாள், சி. பெருமாள் உட்பட திரளான தொழிலா ளர்கள் கலந்து கொண்டனர். திருப்பூர் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டாரத்தில் முறைசாரா தொழில் களில் ஈடுபட்டுள்ள அனைத்து தொழி லாளர்களுக்கும் தீபாவளி பண்டி கைக்கு முன்பாக போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு பொதுத்தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாரா புரம் அண்ணா சிலை முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத் தின் தலைவர் பி.பொன்னுசாமி தலைமை ஏற்றார். சங்கத்தின் துணைச் செயலாளர் மேகவர்ணன், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் என். கனகராஜ் ஆகியோர் உரையாற்றி னர். முடிவில், கோவிந்தராஜ் நன்றி கூறினார்.
