தோழர் எம்.கே.பாந்தே நூற்றாண்டு விழா
கோவை, அக்.4- உலகத் தொழிலாளர் அமைப்பின் 80 ஆவது ஆண்டு விழா மற்றும் சிஐ டியு முன்னாள் பொதுச்செய லாளர் எம்.கே.பாந்தே விழா சிறப்பு கருத்தரங்கம் கணபதி யில் உள்ள இன்ஜினியரிங் சங்க அலுவலகத்தில் நடை பெற்றது. உலகம் முழுவதும் இருக்கின்ற தொழிற் சங்கங்களுக்கு வழிகாட்டியாக செயல்படும் உலகத் தொழிலாளர் அமைப்பின் 80 ஆவது ஆண்டு விழா மற்றும் சிஐடியு முன்னாள் பொதுச்செயலாளரும், மூத்த தலைவர்க ளில் ஒருவரான எம்.கே. பாந்தே நூற்றாண்டு விழா கணபதியில் உள்ள இன்ஜினியர் சங்க அலுவலகத்தில் வெள்ளியன்று நடைபெற் றது. கருத்தரங்கத்திற்கு சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் எம்.கனகராஜ் தலைமை வகித் தார். சிஐடியு மாநில துணைத்தலைவர் சந்திரன் சிறப்புரையாற்றினார். இதில், சிஐ டியு மூத்த தலைவரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான யு.கே.வெள்ளிங் கிரி, சிஐடியு மாவட்டத் தலைவர் கே.மனோ கரன், செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஆர்.வேலுசாமி உள்ளிட்டோர் உரையாற்றினர். நிகழ்வில் சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர்கள் மற்றும் இணைப்பு சங் கங்களின் நிர்வாகிகள் திரளானோர் பங் கேற்றனர்.
