tamilnadu

img

டாஸ்மாக் ஊழியர்களுக்கு மிரட்டல் எஸ்பியிடம் புகார்

டாஸ்மாக் ஊழியர்களுக்கு மிரட்டல் எஸ்பியிடம் புகார்

கோவை, செப்.1- போலி பத்திரிகையாளர்கள் மற்றும் சில சாதி அமைப்புகளை சேர்ந்தவர்கள் பணம் கேட்டு டாஸ் மாக் ஊழியர்களை மிரட்டும் போக்கு தொடர்கிறது. இவர்கள் மீது உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்  என சிஐடியு, எல்பிஎப், டிடிபிடிஎஸ் ஆகிய டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவி னர் ஆட்சியர், காவல் ஆணையர், எஸ்பி ஆகியோரி டம் திங்களன்று மனு அளித்தனர். எல்பிஎஃப், சிஐடியு, டிடிபிடிஎஸ் ஆகிய தொழிற் சங்கங்களை உள்ளடக்கிய டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் அளித்த  மனுவில், டாஸ்மாக் ஊழியர்கள் 21 ஆண்டுகளாக குறைந்தபட்ச ஊதியம் மற்றும் பாதுகாப்பு இன்றி பணி யாற்றி, அரசுக்கு ஆண்டுக்கு 50,000 கோடி ரூபாய்க்கு  மேல் வருவாய் ஈட்டித் தருகின்றனர். ஆனால், சமீபகால மாக போலி பத்திரிகையாளர்கள் மாமூல் கேட்டு மிரட்டு வதும், சில சாதி அமைப்புகள் நன்கொடை கேட்டு, மறுக் கும்போது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் (PCR Act)  பொய் புகார் அளித்து அச்சுறுத்துவதும் அதிகரித்துள் ளது.  எனவே இத்தகைய சமூக விரோத செயல்களைத் தடுத்து, டாஸ்மாக் ஊழியர்களைப் பாதுகாக்க உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அதில், தெரிவிக் கப்பட்டது.