குண்டடம் ஊராட்சிப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க குழு
திருப்பூர், அக்.2- குண்டடம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 10 நாட்களுக்குள் குழு அமைக்க வேண்டும் என அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமை யில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள் ளது. குண்டடம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் கடந்த சில மாதங் களாக குடிநீர் விநியோக பிரதானக் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டும், பல்வேறு பகுதிகளில் நீர்க் கசிவு ஏற்பட்டும், குண்டடம் ஊராட்சி ஒன்றியதிற் கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. இது தொடர்பாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் இதுகுறித்து விசாரித்து தீர்வு காண மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் கயல்விழி செல்வ ராஜ் தலைமையில், குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அனைத்து ஊராட்சி செயலாளர், வட்டார வளர்ச்சி அலுவலகள், குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஊராட்சி செயலாளர்கள் 13 ஊராட்சிப் பகுதிகளில் போதுமான குடிநீர் கிடைப்பதில்லை என கூறி னர். இதையடுத்து குண்டடம் ஊராட்சி ஒன்றிய கிராமப் பகுதிக ளுக்கும் தங்கு தடையற்ற குடிநீர் கிடைக்க குடிநீர் விநியோ கத்தை கண்காணிக்கும் குழு ஒன்றை ஊராட்சி பகுதிகளில் 10 நாட்களுக்குள் அமைக்க வேண்டும். குடிநீர் விநியோக பிர தானக் குழாய்களில் உடைப்புகளை உடனடியாக சீர் செய்ய வேண்டும். பத்து நாட்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கை கள் குறித்து தனக்கு உடனுக்குடன் தகவல் அனுப்ப வேண்டும் என குடிநீர் வழங்கல் துறை அலுவலர்கள் மற்றும் கிராம ஊராட்சிப் பணியாளர்களிடம் அமைச்சர் அறிவுறுத்தினார்.
இன்று மின்தடை
உடுமலை, அக்.2- உடுமலை தாலுகா பாலப் பட்டி துணை மின்நிலைய மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காந்திநகர், அண்ணாகு டியிருப்பு, நேருவீதி, நக ராட்சி அலுவலகம், பார்க், ரயில்நிலையம், போலிஸ் குடியிருப்பு, சந்தை, எஸ்.வி. புரம், பாலப்பம்பட்டி, மைவாடி பிரிவு, கண்ணம நாயக்கனூர், குரல்குட்டை, மடத்தூர், மலையாண்டிபட் டிணம், மருள்பட்டி, உரல் பட்டி, சாளரப்பட்டி மற்றும் பாப்பான்குளம் ஆகிய பகு திகளில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட் டுள்ளது.