சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
நாமக்கல், ஜூலை 2- திருசெங்கோட்டிலுள்ள கே.எஸ்.ரங்கசாமி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வாரியத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கே.எஸ்.ரங்க சாமி கல்லூரி வளாகத்தில், தொழில்நுட்பப் பயிலக முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா அண்மையில் நடைபெற்றது. கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரி யின் முதல்வர் ஏ.குமரவேல், இக்கல்லூரியின் முன்னாள் மாணவரும், வேலூர் விஐடி கல்லூரியின் பேராசிரியருமான எம்.செந்தில்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்பப் பயிலக முதல்வர் பி. கோபிநாத் வாழ்த்திப் பேசினார். இவ்விழாவில், வாரிய தேர் வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கே.எஸ்.ஆர் கல்வி நிறுவன இயக்கு நர் வி.ராதாகிருஷ்ணன், ராஜம்மாள் ரங்கசாமி தொழில் பயிற்சி நிறுவன முதல்வர் ஆர்.சுகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், கணினித்துறை பேராசிரியர் எஸ்.டினுபிரியா நன்றி கூறினார்.