tamilnadu

img

விளையாட்டுப் போட்டியில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பாராட்டு

விளையாட்டுப் போட்டியில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பாராட்டு

தருமபுரி, செப்.10- மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை – 2025க்கான மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளை யாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. மனவளர்ச்சி குறை வான மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள போட்டிக ளில், தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு வரலாற்றுத்துறை மாணவர் எஸ்.கிரிமுருகன் கலந்து கொண்டு, 100 மீட்டர் ஓட்ட போட்டியில் முதலிடம், குண்டு எரியும் போட்டியில் இரண்டாம் இடமும் பெற் றார். இதேபோன்று, காதுகேளாத மாற்றுத்திறனாளிகள் பிரிவில் இளங்கலை தமிழ் துறை முதலாமாண்டு மாணவி எம்.மௌனிகா, 100 மீட்டர் ஓட்ட போட்டியில் முதலிடம், குண்டு எரிதலில் மூன்றாம் இடமும் வென்று சாதனை படைத்தார். இதையடுத்து வெற்றி  பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் கோ. கண்ணன், கல்வி இயக்குநர் கு.பாலமுருகன், அனைத்து துறை பேராசிரியர்கள், அலுவலகப் பணியா ளர்கள், கௌரவ விரிவுரையாளர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.