தோழர் கே.நாராயணன் நினைவேந்தல்
நாமக்கல், ஜூலை 31- தோழர் கே.நாராயணன்-னின் முத லாம் ஆண்டு நினைவு தினம் வெள்ளி யன்று (இன்று) அனுசரிக்கப்படுகிறது. கேரளம் மாநிலம், பிலாக்கோடு என்ற ஊரில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் தோழர் கே.என் அழைக்கப் படும் கே.நாராயணன். இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ள னர். கேரளாவில் படித்துவிட்டு தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வந்த நாரயணனுக்கு பள்ளிபாளையத்தில் ஒரு மருத்துவரி டம் உதவியாளராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. பிறகு 1965 ஆம் ஆண்டு சேஷசாயி காகித ஆலையில் சேர்ந்து நிரந்தர தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். 1970 சிஐடியு அமைப்பு உருவாக்கப்பட்ட பிறகு, அதற்கு ஆதரவு திரட்ட தோழர் பி.ராமமூர்த்தி, எஸ்பிபி காகித ஆலை மில் கேட் அருகே வந்தபோது தோழர் பி.அனந்தநம்பியாரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு சிஐடியு-வில் பயணிப்பதாக கூறி னார். தொடர்ந்து தொழிலாளர் நலனுக்காக எஸ்பிபி நிர்வா கத்தின் அடக்குமுறையை எதிர்த்து வரலாற்று சிறப்புமிக்க 110 நாட்கள் வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு போராட் டங்களை நாராயணன் நடத்தியுள்ளார். எஸ்பிபி, சிமெண்ட் ஆலை, விசைத்தறி, சுமை தூக்குவோர் சங்கம் தொடங்கி இறுதி வரை டிசிஎம்எஸ் சங்க பொறுப்பாளராக பணியாற்றி னார். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், சிஐடியு மாவட்டச் செயலாளராகவும், ஆலாம்பாளையம் பேரூராட்சி வார்டு உறுப்பினராகவும் திறம்பட பணியாற்றினார். இந்நிலையில், அவரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் மற்றும் படத் திறப்பு நிகழ்ச்சி வெள்ளியன்று (இன்று) மாலை பள்ளி பாளையம் காவேரி ஆர்.எஸ் தோழர் ஆனந்த நம்பியார் நினை வகத்தில் நடைபெறவுள்ளது. சிஐடியு மாநில துணைத் தலைவர் சிங்காரவேலு உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.