tamilnadu

img

சுதந்திர போராட்ட வீரர் தோழர் வி.ராமசாமி நினைவேந்தல் நிகழ்வு

சுதந்திர போராட்ட வீரர் தோழர் வி.ராமசாமி நினைவேந்தல் நிகழ்வு

நாமக்கல், ஜூலை 23- சுதந்திர போராட்ட வீர ரும், சிபிஎம் முதுபெரும் தலைவருமான தோழர்  வி.ராமசாமியின் நினைவுதி னம் புதனன்று அனுசரிக்கப் பட்டது. இந்தியா சுதந்திர போராட்ட வீரரும், திருச் செங்கோடு சட்டமன்ற முன் னாள் உறுப்பினரும், மார்க் சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான  தோழர் மோளியப்பள்ளி வி.ராமசாமி-யின்  26 ஆம் ஆண்டு நினைவு தினம் புதனன்று  அனுசரிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம்,  மோளிப்பள்ளியிலுள்ள அவரது நினைவ கத்தில் நடைபெற்ற நினைவுதின நிகழ் விற்கு, விவசாயிகள் சங்க ஒன்றியச் செய லாளர் ஆர்.குப்புசாமி தலைமை வகித்தார். அவரது உருவப்படத்திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.ஆதிநாராயணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னார். இதில் சிபிஎம் நகரச் செயலாளர் எஸ். சீனிவாசன், ஒன்றியச் செயலாளர் கே.கதிர் வேல், விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் ஆர்.வேலாயுதம், ஒன்றியத் தலை வர் சி.பெரியசாமி, பொருளாளர் பொன்னி மேடு சி.பெரியசாமி உட்பட பலர் கலந்து  கொண்டனர். இதேபோன்று, பள்ளிபாளை யம் காவேரி ஆர்.எஸ். பகுதியிலுள்ள சிஐ டியு அலுவலகத்திலும், ஆவரங்காடு கட்சி  அலுவலகத்திலும் நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.அசோகன், சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர் பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.