நிலக்கடலை விதைப்பண்ணை ஆட்சியர் நேரில் ஆய்வு
நாமக்கல், செப்.24- நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையத்தில் அமைந் துள்ள விதைப்பண்ணைகளில் ஆட்சியர் துர்காமூர்த்தி ஆய்வு செய்து, விவசாயிகளுடன் கலந்துரையாடினார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எலச்சிபாளையம் வட்டாரத்தில், வேளாண்மைத் துறையின் சார்பில் 24 விவசாயிகள் நிலக்கடலை விதைப்பண்ணை அமைத் துள்ளனர். இந்தப் பண்ணைகளில் உற்பத்தி செய்யப் படும் தரமான விதைகளை வேளாண் விரிவாக்க மையங்களுக்கு வழங்கினால், அரசு நிர்ணயித்த விலை யில் ஒரு கிலோவுக்கு ரூ.100 வீதம் கொள்முதல் செய்யப்படுகிறது. இது உள்ளூர் சந்தை விலையை விட விவசாயிகளுக்கு அதிக லாபம் ஈட்டித்தரும் ஒரு திட்டமாகும். போக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி எஸ்.மயில்சாமி என்பவர் 2.53 ஏக்கர் பரப்பளவில் கிர்னார்-4 வகை நிலக்கடலை சாகுபடி செய்துள்ளார். இந்தப் பண்ணையை நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி, விவசாயி மயில்சாமியுடன் கலந்துரையாடினார். அப் போது விவசாயி, இந்தப் பண்ணையின் மூலம் சுமார் 2,000 கிலோ நிலக்கடலை உற்பத்தி செய்ய முடியும் என்றும், அதன் மூலம் ரூ.2 லட்சம் வரை வருமானம் கிடைக்கும் என்றும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, ஆட்சியர் துர்காமூர்த்தி எலச்சிபாளையம் வட்டாரத்தில் நடைபெற்று வரும் பல்வேறு கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தார். கூத்தம்பூண்டி பகுதியில், 15ஆவது நிதிக்குழு மானி யத்தின் கீழ் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாணிக்கம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் வட்டார பொது சுகாதாரக் கட்டிடம். எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.34.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இரண்டு புதிய வகுப்பறைகள். இவற்றை நேரில் பார்வையிட்ட ஆட்சியர், ஒப்பந்த காலத்தில் பணி களை விரைந்து முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்க ளுக்கு உத்தரவிட்டார்.
