மழையால் ஏற்காட்டில் குளிர்ந்த காலநிலை
சேலம், ஆக.29- ஏற்காட்டில் பெய்த மழை யால், குளுமையான கால நிலை நிலவி வருவதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி யடைந்தனர். சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கன மழை கொட்டியது. ஏற்காட் டில் 2 மணி நேரம் தொடர்ச்சி யாக கனமழை பெய்தது. இரவிலும் சாரல் மழையாக பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண் ணீர் தேங்கியது. மழையை தொடர்ந்து ஏற்காட்டில் குளிர்ச்சியான காலநிலை நிலவி வருவதால் பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந் தனர். இதேபோல, ஓமலூர் பகுதியிலும் ஒரு மணி நேரத் திற்கும் மேலாக கனமழை கொட்டியது. சேலம் மாநக ரில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்த்த நிலை யில், லேசான தூறலுடன் நின் றதால் மக்கள் ஏமாற்றம டைந்தனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 20.2 மி.மீ. மழை பதிவானது குறிப்பிடத்தக்கது.
மா சாகுபடியில் கல்தார் பயன்படுத்துவதால் ஏற்றுமதிக்கு உரிய தரம் குறையும் அபாயம்
சேலம், ஆக.29- மா சாகுபடியில் கல்தார் எனப்ப டும் பேக்லோப்பூட்ரசாலை விவசாயி கள் பயன்படுத்துவதால் பழக்கூழ் தயா ரிக்க உகந்த தன்மை மற்றும் ஏற்றும திக்கு உண்டான தரம் குறையும் அபா யம் ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தின் முக்கிய தோட் டக்கலைப் பயிரான மா, 6048 ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நடப்பு வருடத்தில் மா விளைச்சல் அளவுக்கு மீறிய விளைச்ச லாக இருந்தது. அதிகளவில் மா சந்தை யில் குவிந்ததால் சரியான விலை கிடைக்கவில்லை. மாவில் சில ரகங்கள் ஒவ்வொரு வருடமும் காய்ப்பதில்லை. ஓராண்டோ, ஈராண்டோ இடைவெளி விட்டு பின் காய்க்கும். ஆனால், விவ சாயிகள் ஆண்டுதோறும் மகசூல் எடுக் கும் நோக்கில் கல்தார் எனப்படும் பேக் லோப்பூட்ரசாலை அளவுக்கு அதிக மாக உபயோகிப்பதால் வர்த்தக சீர் நிலை பாதிப்படைந்து இயற்கை சுழற்சி யும் மாறுபடுகிறது. மேலும், கல்தாரை அதிகம் உபயோகிக்கும் பொழுது மாம ரத்தில் வளர் சுழற்சியில் மாறுபாடு அடைந்து, மாங்காய் காய்க்கும் தன் மையை எளிதில் இளம் பருவத்தி லேயே இழக்கும். வளமிக்க மண்ணை மலட்டு தன்மை அடையச் செய்யும். தொடர் உபயோகிப்பால் பூப்பூத் தலை ஆண்டுதோறும் ஊக்கப்படுத்தி முதன்மை பருவம் மற்றும் இடைப்பரு வம் என விடாது அழுத்தம் தரும் பட் சத்தில் மா மரங்கள் எளிதில் பூச்சி மற் றும் நோய்த்தாக்குதலுக்கும் பெருக் கத்திற்கும் வழிவகுக்கும். கல்தார் உப யோகிக்க கூடாது என்ற நிலையில், விவசாயிகள் கல்தாரை குறுகிய கால இடைவெளியில் உபயோகிப்பதால் மாம்பழத்தின் தரம் மற்றும் சர்க்கரை சத்து குறைகிறது. அதனால் பழக்கூழ் தயாரிக்க உகந்த தன்மை மற்றும் ஏற்று மதிக்கு உண்டான தரத்தையும் இழக் கிறது. எனவே, விவசாயிகள் கல்தாரை உபயோகிக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தி யுள்ளார்.