tamilnadu

img

கோவை: மருத்துவ மாணவர்கள்  முறைகேட்டில் ஈடுபடவில்லை-மருத்துவ கல்வி இயக்குநர் 

கோவை பிஎஸ்ஜி கல்லூரியைச் சேர்ந்த மருத்துவமாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட வில்லை என்ற மருத்துவ கல்வி இயக்குநர் நாராணபாபு தெரிவித்துள்ளார். 
கோவை பி.எஸ்.ஜி. தனியார் மருத்துவக் கல்லூரியில், ஒரு மாணவி மற்றும் ஒரு மாணவரின் நீட் தேர்வு ஹால் டிக்கெட் புகைப்படங்கள் மீது சந்தேகம் எழுந்திருப்பதாக, மருத்துவக் கல்வி இயக்குநரகத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாக உதித் சூர்யா என்ற மாணவர் சிக்கினார். இதைத்தொடர்ந்து  அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் இந்த ஆண்டு நீட் தேர்வில் சேர்ந்த மாணவர்களின் ஆவணங்களைப் பரிசோதிக்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில் கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டில் படித்து வரும் 150 மாணவர்களின் ஹால் டிக்கெட் உள்ளிட்ட ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன.
அதில், சி.பி.எஸ்.இ. பள்ளியில் படித்து தேர்வு எழுதிய காஞ்சிபுரத்தை சேர்ந்த மாணவர் ஒருவரின் நீட் தேர்வு ஹால் டிக்கெட் புகைப்படமும் தற்போதைய புகைப்படமும் ஒத்துப்போகவில்லை என்றும்  தர்மபுரியை சேர்ந்த மாணவி ஒருவரின் ஹால் டிக்கெட்டில் புகைப்படமும் தற்போதைய புகைப்படமும் மாறுபட்டிருப்பது போல் இருந்தது. 
இதைத்தொடர்ந்து  அந்த இருவரின் சேர்க்கையில் சந்தேகம்  எழுந்திருப்பதாக, மருத்துவக் கல்வி இயக்குநகரத்திற்கு கோவை பிஎஸ்ஜி மருத்துவ கல்லூரி சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. 
இதைத்தொடர்ந்து ஹால் டிக்கெட் புகைப்படம் தொடர்பாக சந்தேகத்திற்குள்ளான மாணவியும், மாணவனும் ஆவண சரிபார்ப்புக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில்  நேரில் சென்று விளக்கம் அளித்தனர். 
இதையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயண பாபு கூறியதாவது, கோவை பிஎஸ்ஜி கல்லூரியைச் சேரந்த 2 மருத்துவ மாணவர்களின் சேர்க்கை சரியாக உள்ளது. மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபடவில்லை. மாணவர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்ததில்  எந்த குழப்பமும் இல்லை . இனி வரும் காலங்களில் இதுபோன்ற குழப்பங்களை தவிர்க்க பயோமெட்ரிக் முறை பின்பற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.  
 

;