முறையான பராமரிப்பில்லாத அரசு மருத்துவமனை அவல நிலையைப் போக்க சிஐடியு வலியுறுத்தல்
உடுமலை, அக்.8 - உடுமலைப்பேட்டை அரசு தலைமை மருத்துவமனை முறையான பராமரிப்பு இல் லாமல் நோயாளிகளுக்கு சிரமத்தை ஏற்படுத் தும் அவல நிலையில் உள்ளது. இப்பிரச் சனையில் அரசு தலையிட்டு உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்தியுள்ளது. உடுமலை, மடத்துக்குளம் தாலுகாக்க ளில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கணக் கான மக்கள் சிகிச்சைக்காக இங்கு வந்து செல்லும் நிலையில், அடிப்படை வசதிக ளை முறையாக ஏற்படுத்தாததால் மருத்து வப் பயனாளர்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகின்றனர். தூய்மைப்பணியை காண்ட் ராக்ட் எடுத்துள்ள க்யூபிஎம்எஸ் நிறுவனம் தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி குப்பை களை அகற்றுவதற்கு ஏற்பாடு செய்ததை கண்டித்தும், குப்பைகளை அகற்ற நடவ டிக்கை எடுக்காத உடுமலை நகராட்சி நிர்வா கத்தை கண்டித்தும் புதனன்று காலை மருத் துவமனை பகுதியில் கண்டனக் கூட்டம் நடை பெற்றது. இதில் சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ஜெகதீசன், சிஐடியு கட்டு மான சங்சச் செயலாளர் கி.கனகராஜ் மற்றும் தொழிலாளர்கள் பங்கேற்றனர். தலைமை மருத்துவருடன் சந்திப்பு இதையடுத்து, தலைமை மருத்துவரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் வலியு றுத்தப்பட்டன. குறிப்பாக, மருத்துவமனை அவசரப் பிரிவுக்கு உள்ளே வரும் நுழை வாயிலில் முன்பகுதி சேதமடைந்து பல மாதங்களாகியும் சரி செய்யப்படாமல், அங்கு வரக்கூடிய அவசர ஊர்திகள் குழியி லும் மேட்டிலும் ஏறி இறங்கி நோயாளிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகின்றனர். கழிவுநீர் வடிகாலுக்காகப் போடப்பட்ட தடுப்புக் கம்பி வலை சேதமாகி சரி செய்யப்படாமல், பெரிய சிலாப் கல் அந்த குழியில் போடப்பட்டு கம்பி நீட்டிக் கொண்டுள்ளது. மருத்துவப் பயனா ளிகள் கம்பியில் கால் தடுக்கி விழுந்து எழுந்து செல்கின்றனர். ஒப்பந்த நிறுவனத்தின் உழைப்புச் சுரண்டல் மருத்துவமனையில் தூய்மைப்பணியை காண்ட்ராக்ட் எடுத்துள்ள நிறுவனத்தினர், குறைவான தொழிலாளர்களை வைத்து அள வுக்கதிகமாக வேலை வாங்கி வருவதுடன், வெறும் கையால் மருந்துக் கழிவுகள், உப கரணக் கழிவுகள், உணவுக் கழிவுகளைப் பிரித்தெடுக்க நிர்ப்பந்திக்கின்றனர். இதனால் தொழிலாளர்கள் கடும் பாதிப்படைகின்றனர். 80க்கும் மேற்பட்டோர் செய்ய வேண்டிய பணிகளை 32 பேரை வைத்து உழைப்புச் சுரண்டல் நடத்துகின்றனர். மருத்துவமனைகளில் அன்றாடம் வரும் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த ஏற் பாடு செய்யாமல் சுகாதார சீர்கேடு ஏற்படுகி றது. குப்பைகளை எடுத்துச் செல்ல வேண் டிய நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்ற தனியார் நிறுவனத்தை ஒப்பந்தம் செய்துள்ள தால் அவர்களும் குப்பைகளை பிரித்து எடுத் துச் செல்வதில்லை. கடந்த இரண்டு ஆண்டு களாக தொடர்ச்சியாக இதேநிலை நீடிக்கி றது. இதனால் அங்கு பணியாற்றும் தொழிலா ளர்கள் கடுமையான பணிச்சுமைக்கும் மன உளைச்சலுக்கும் உடல்நல சீர்கேட்டுக்கும் ஆளாகி உள்ளனர். போதிய வசதி இல்லை மேலும் மருத்துவமனையில் போதுமான தள்ளுவண்டிகள், வீல் சேர், ஸ்ட்ரெச்சர், இல் லாமல் பழுதடைந்தவைகளையே பயன்ப டுத்துவதால் கடும் சிரமப்படுகின்றனர். போது மான பணியாளர்கள், செவிலியர், மருத்து வர், டெக்னீசியன்கள் உட்பட அனைத்து பொறுப்புகளிலும் காலிப்பணியிடங்கள் உள்ளன. ஆனால் காலிப்பணியிடம் பூர்த்தி செய்ய தனக்கு எந்த அதிகாரமும் இல்லை, தளவாடப் பொருட்கள் வாங்கவும், பராம ரிப்புக்கும் நிதியில்லை, அரசு தான் முடிவு செய்ய வேண்டும், நகராட்சிதான் குப்பை களை அகற்ற வேண்டும் என்று தலைமை மருத்துவர் கூறுகிறார். எனவே தமிழக அரசு போர்க்கால அடிப்ப டையில் இம்மருத்துவமனையை பராம ரிக்க நிதி ஒதுக்க வேண்டும். தளவாடப் பொருட்களை தேவையான அளவு கொள்மு தல் செய்ய வேண்டும். மருத்துவப் பணிகளுக் கும், தூய்மைப் பணிக்கும் காண்ட்ராக்ட் முறையை ரத்து செய்துவிட்டு போதுமான மருத்துவர்களை, அலுவலர்களை, ஊழி யர்களை நியமிக்கவேண்டும். தூய்மைப் பணி செய்யும் ஊழியர்களை உரிய பாதுகாப் பின்றி மருத்துவக் கழிவுகளை பிரித்தெடுக் கும் பணியில் ஈடுபடுத்தக் கூடாது, உடுமலை நகராட்சி நிர்வாகம் ஒருநாள் விட்டு ஒருநாள் குப்பைகளை அகற்றுவதை உறுதி செய்ய வேண்டும். சலவைக்கூடம், சமையலறை, கழிப்பிட வசதிகளை மேம்படுத்தி சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
