தனியார்மய நடவடிக்கைகளை கைவிட சிஐடியு வலியுறுத்தல்
கோவை, ஆக.31- தனியார்மய நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என சிஐடியு மக் களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் சங் கம் வலியுறுத்தியுள்ளது. சிஐடியு மக்களைத் தேடி மருத் துவ ஊழியர்கள் சங்க மாநில நிர்வாகக் குழு கூட்டம், கோவை ரயில் நிலை யம் அருகே உள்ள தாமஸ் கிளப் பில் ஞாயிறன்று நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் எஸ். கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார் ஈரோடு மாவட்டச் செயலாளர் ரேவதி வர வேற்றார். பொதுச்செயலாளர் எஸ். மகாலட்சுமி, பொருளாளர் பி.சாய்சித்ரா ஆகியோர் அறிக்கைகளை முன்வைத் தனர். அரசு ஊழியர் சங்க மாநில செயற் குழு உறுப்பினர் ஆர்.ரவி வாழ்த்திப் பேசினார். இக்கூட்டத்தில், சுகாதாரத் துறை பணியாளர்களான மக்களை தேடி மருத்துவ ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஊழியர்களின் பணிச் சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதார திட்டத்தில் அவுட் சோர்சிங் என்ற பெயரில் மேற்கொள் ளும் தனியார்மய நடவடிக்கைகளை கைவிட வேண்டும், உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. சேலம் மாவட்டச் செயலாளர் பாலாம்பிகா நன்றி கூறினார்.