சிஐடியு அரசு போக்குவரத்துக் கழக மாநாடு
ஈரோடு, ஜூலை 28- அரசு போக்குவரத்து கழகத்தில் தனியார்மய நடவடிக்கையை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் ஈரோடு 35 ஆவது ஆண்டு பேரவை கூட்டம் சூளுரைத்துள்ளது. சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட 35 ஆவது ஆண்டு பேரவை திங்க ளன்று ஈரோடு தலைமை சங்க அலு வலக கூட்டரங்கில் நடைபெற்றது. துணை பொதுச் செயலாளர் எஸ்.இளங்கோவன் கொடியேற்றினார். உதவிச் செயலாளர் சி.கருப்புசாமி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மண்ட லத் தலைவர் கே.மாரப்பன் தலைமை வகித்தார். உதவி செயலாளர் ஜி.ரவி வரவேற்றார். சிஐடியு மாவட்டச் செய லாளர் எச்.ஸ்ரீராம் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றினார். வேலை அறிக்கை, வரவு-செலவு அறிக்கை சமர்பிக்கப்பட்டது. சங்கத் தின் பன்முகத் தலைவர் என்.முருகையா, ஓய்வு பெற்ற ஊழியர் அமைப்பின் மண்டலத் தலைவர் பி. ஜெகநாதன் மற்றும் திருப்பூர் மண் டல பொதுச் செயலாளர் கே.கொங்கு ராஜ் ஆகியோர் உரையாற்றினர். இதில், சட்டத்திற்குப் புறம்பாக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.3500 கோடியை உடனடியாக வழங்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்பின் அடிப் படையில் அகவிலைப்படி நிலுவை யின்றி வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து காலிப் பணி யிடங்களையும் பூர்த்தி செய்ய வேண் டும். எந்த சூழ்நிலையிலும் தனியார் மய நடவடிக்கையை அனுமதிக்கக் கூடாது. ஓய்வூதியர் இல்லங்கள் உரு வாக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. இப்பேரவை கூட்டத்தில் மண்ட லத் தலைவராக எஸ்.இளங்கோவன், பொதுச் செயலாளராக டி.ஜான்சன் கென்னடி, பொருளாளராக சி. அய்யாசாமி, துணை பொதுச் செய லாளர்களாக டி.எஸ்.பால கிருஷ்ணன், என்.தேவராஜ், உதவி தலைவர்கள் மற்றும் உதவி செய லாளர்களாக தலா 8 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.