சிஐடியு சேலம் மாவட்ட மாநாடு பேரணி
சேலம், ஆக.24- சிஐடியு சேலம் மாவட்ட மாநாடு பேரணி, பொதுக்கூட்டத்தில் பெருந்திரளானோர் பங் கேற்றனர். இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐ டியு) சேலம் மாவட்ட 14 ஆவது மாநாடு ஆக.23,24 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இம்மாநாட்டில், சிஐடியு மாவட்டத் தலைவ ராக டி.உதயகுமார், செயலாளராக ஏ. கோவிந்தன், பொருளாளராக வி. இளங்கோ மற்றும் 19 நிர்வாகிகள் உட்பட 47 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய் யப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஞாயி றன்று காந்தி ரோடு பகுதியிலிருந்து துவங் கிய பேரணியை, சிஐடியு மாநில துணை பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார் துவக்கி வைத்தார். அரசு கலைக்கல்லூரி, முள்வாடி கேட் வழியாக கோட்டை மைதா னத்தில் நினைவடைந்தது. இதைத்தொ டர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் உதயகுமார் தலைமை வகித்தார். உதவித்தலைவர் ஆர்.வெங்கட பதி வரவேற்றார். சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், துணைப் பொதுச்செய லாளர் கே.ஆறுமுக நயினார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் நிர்வாகிகள் எஸ்.கே.தியாகராஜன், பி.பன்னீர்செல் வம், பி.விஜயலட்சுமி உட்பட பெருந்திரளா னோர் கலந்து கொண்டனர்.