tamilnadu

img

போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவாக திருப்பூரில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து ஊழியர்களுக்கு  ஆதரவாக திருப்பூரில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

திருப்பூர், செப்.19 - வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்காக தொடர்ந்து போராடி வரும் போக்குவரத்து ஊழியர்கள், ஓய்வு பெற்றோ ருக்கு ஆதரவாக கொட்டும் மழையிலும் திருப்பூரில் சிஐடியு  ஆர்ப்பாட்டம் நடத்தியது. திருப்பூர் குமரன் நினைவகம்  முன்பாக வெள்ளியன்று மாலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்திற்கு சிஐடியு மாவட்ட துணைச்செயலாளர் சித்ரா  தலைமை ஏற்றார். இதில் போக்குவரத்துத் தொழிலாளர்க ளின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக  நிறைவேற்றி, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர  வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சிஐ டியு பொதுத் தொழிலாளர் சங்கச் செயலாலர் என்.சுப்பிரமணி யம், சிஐடியு விசைத்தறித் தொழிலாளர் சங்கப் பொதுச் செய லாளர் பி.முத்துசாமி, சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.சம்பத்,  மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் ஆகியோர் கோரிக்கை களை வலியுறுத்திப் பேசினர். இதில் பல்வேறு துறை வாரி  சங்கங்களைச் சேர்ந்த சிஐடியுவினர் பங்கேற்றனர்.