போராடும் அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக திருப்பூர், உடுமலையில் சிஐடியு ஆர்ப்பாட்டம்
திருப்பூர், ஆக.1 - போக்குவரத்துக் கழகங்களைப் பாது காக்க தனியார் மய ஒப்பந்த நடவடிக்கை யைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி திருப்பூரில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வரும் அரசு போக்குவரத்து ஊழியர் சங்க தொழிலாளர்க ளுக்கு ஆதரவாக திருப்பூர், உடுமலை பேட்டையில் சிஐடியு சார்பில் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போக்குவரத்து கழகங்களை பாதுகாக்க, பணியில் உள்ள தொழிலாளர்களும், ஓய்வு பெற்றோரும் ஒன்றிணைந்து தொடர் காத்தி ருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர் களுக்கு ஆதரவாக திருப்பூர் மாவட்ட சிஐடியு சார்பில் திருப்பூர் காங்கேயம் சாலை அரசுப் போக்குவரத்து பணிமனை திருப்பூர் மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சித்ரா தலைமை வகித்தார். மாவட்டத் தலை வர் ஜி.சம்பத், மாவட்டச் செயலாளர் கே.ரங்க ராஜ், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு நிர்வாகி துரைசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். அப்போது 2003 க்கு பின் பணியில் சேர்ந்த தொழிலாளர்க ளுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்க ளுக்கு வழங்க வேண்டிய டி.ஏ. மற்றும் பண பலன்களை வழங்க வேண்டும். தனியார் மய ஒப்பந்த நடவடிக்கை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர். சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர்கள் கே.உண்ணிகிருஷ் ணன், பி.பாலன், அரசு போக்குவரத்து ஊழி யர் சங்க மண்டலத் தலைவர் செல்லத்துரை உள்பட திரளானோர் பங்கேற்றனர். உடுமலையில் ஆர்ப்பாட்டம் அதேபோல் உடுமலை பகுதி சிஐடியூ சார் பில் உடுமலை அரசுப் பேருந்து பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப் பாட்டத்தில் சங்கத்தின் போக்குவரத்து சங்க நிர்வாகி கார்த்தி, சிஐடியு மாவட்ட துணை ச் செயலாளர் எஸ்.ஜெகதீசன், பொது தொழி லாளர் சங்க நிர்வாகி வெ.ரங்கநாதன், தையல் கலைஞர்கள் சங்க நிர்வாகி பி.ரத்தினசாமி, அங்கன்வாடி சங்க நிர்வாகி சித்ரா, எல்லம் மாள் உள்பட பல்வேறு துறைவாரி சங்கங்க ளைச் சேர்ந்த நிர்வாகிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக திருப்பூர் மண்டல அலுவ லகம் முன்பு அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டம் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. என்.சுப்பிரமணியம் துவக்கி வைத்தார்.