போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிஐடியு ஆர்ப்பாட்டம்
நாமக்கல், ஆக.22- தொடர் போராட்டத்தில் ஈடுபட் டுள்ள போக்குவரத்துத் தொழிலா ளர்களுக்கு ஆதரவாக சிஐடியு- வினர் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூ தியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான பணப்பலன்களை வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர். 5 ஆவது நாளாக வெள்ளியன்றும் போராட் டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவ ரத்து தொழிலாளர்களின் கோரிக் கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். நியாயமான கோரிக்கை களை பேசி தீர்க்காமல் தொழிலா ளர்களை கைது செய்யும் நடவடிக் கையைக் கண்டித்து, சிஐடியு-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபா ளையம், காவேரி ஆர்.எஸ் பகுதி யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, விசைத்தறி தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் எஸ். முத்துக்குமார் தலைமை வகித்தார். இதில் சிஐடியு மாவட்ட உதவிச் செயலாளர் கே.மோகன், விசைத் தறி தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் கே.குமார், நிர்வாகிகள் முருகேசன், அசன், சரவணன், அங்கமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு ஈரோடு மண்டல தலைமை அலு வலகம் முன்பு 5 ஆவது நாளாக நடை பெற்ற போராட்டத்திற்கு, மண்டலத் தலைவர் எஸ்.இளங்கோவன் தலைமை வகித்தார். மண்டலச் செய லாளர் டி.ஜான்சன் கென்னடி, பொரு ளாளர் சி.அய்யாசாமி, பன்முக தலைவர் என்.முருகையா உட்பட பலர் கலந்து கொண்டனர். கோவை கோவை, சுங்கம் பணிமனை முன்பு நடைபெற்று வரும் போராட் டத்திற்கு, போக்குவரத்து ஊழியர் சங்க மண்டலத் தலைவர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். மாநில துணை பொதுச்செயலாளர் கனகராஜ், மண்டல பொதுச்செய லாளர் வேளாங்கண்ணிராஜ், ஓய்வூதியர்கள் நலச்சங்க ஒருங்கி ணைப்பாளர் அருணகிரிநாதன் உட் பட பலர் கலந்து கொண்டனர். சேலம் சேலத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தில், போக்குவரத்து சங்க மண்டலத் தலைவர் செம்பன், பொதுச்செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, பொருளாளர் சேகர், சிஐ டியு மாநில துணைத்தலைவர் ஆர். சிங்காரவேலு, மாவட்ட உதவித் தலைவர்கள் ஆர்.வெங்கடபதி, எஸ்.கே.தியாகராஜன், ஓய்வூதியர் சங்க ஒருங்கிணைப்பாளர் கலைச் செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தருமபுரி தருமபுரி போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு நடை பெற்ற போராட்டத்திற்கு, போக்கு வரத்து ஊழியர் சங்க மண்டலத் தலைவர் எஸ்.சண்முகம் தலைமை வகித்தார். இதில் துணைத்தலைவர் சி.முரளி, பொருளாளர் என்.மயில் சாமி, சிஐடியு மாநிலச் செயலாளர் சி.நாகராசன், மாவட்டச் செயலா ளர் பி.ஜீவா, விரைவு போக்குவ ரத்து ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் கோதண்டபாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.