tamilnadu

img

பிஎம்பி பஞ்சாலை நிர்வாகத்தின் அடாவடி: சிஐடியு ஆர்ப்பாட்டம்

பிஎம்பி பஞ்சாலை நிர்வாகத்தின் அடாவடி: சிஐடியு ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஜூலை 28 – சட்டவிரோதமாக முடி  கிடக்கும் பிஎம்பி பஞ் சாலையை திறந்து தொழி லாளர்களுக்கு வேலை வழங்க கோரி சிஐடியு தலை மையில், தொழிலாளர்கள் குடும்பத்துடன் திங்களன்று  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.  தருமபுரி மாவட்டம், பாளையம்புதூரில் பிஎம்பி பஞ்சாலை இயங்கி வருகிறது. இந்த  பஞ்சாலை நிர்வாகம் 2024 ஜூலை 2 ஆம்  தேதி எவ்வித முன் அறிவிப்போ, அரசிடம்  அனுமதியோ பெறாமல் சட்டவிரோத கதவ டைப்பு செய்துள்ளது. இத்தொழிற்சாலை யில் பணியாற்றிய 200 க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் கடந்த ஓராண்டு காலமாக ஆலை  நிர்வாகத்தின் அராஜக செயலால் பல்வேறு துயரங்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.  இந்நிலையில், பிஎம்பி, பஞ்சாலையை, நிர்வாகம் உடனே திறந்து தொழிலாளர் களுக்கு வேலை கொடுக்கவேண்டும். நிலு வையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும். தினக்கூலி பெண் தொழிலா ளர்களுக்கு நிலுவையில் உள்ள 8 வார சம்ப ளத்தை வழங்கவேண்டும். 2015 முதல் இன்று  வரை தொழிலாளரிடம் பிடித்த செய்த  பிஎப், இஎஸ்ஐ தொகையை செலுத்தி,  தொழிலாளர் கணக்கில் வரவு வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி சிஐடியு தலைமையில், தொழி லாளர்கள் குடும்பத்தோடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலை வர் பி. ஆறுமுகம் தலைமை வகித் தார். சிஐடியு மாநிலச் செயலாளர் சி. நாக ராசன், மாவட்டச் செயலாளர் பி. ஜீவா, ஆகி யோர் சிறப்புரையாற்றினர்.  இதில், சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் எம். கண்ணதாசன் மற்றும் பஞ் சாலை சங்கத்தின் நிர்வாகிகள் ஏ.முருகன், கே.வேலு, பி.ராஜி, எம்.எம்.பழனிச்சாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.  ஆர்ப்பாட்டத்தின் முடிவில் சங்க தலைவர்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.  சதீஷடம் கோரிக்கை மனுவை வழங்கினர்.