tamilnadu

img

தேர்தல் வாக்குறுதிப்படி பணி நிரந்தரம் செய்திடுக

தேர்தல் வாக்குறுதிப்படி பணி நிரந்தரம் செய்திடுக

நாமக்கல், ஜூலை 20- திமுக அரசின் தேர்தல் வாக்குறு திப்படி, உள்ளாட்சித்துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சிஐடியு ஊரக வளர்ச்சி உள் ளாட்சித்துறை ஊழியர் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. சிஐடியு ஊரக வளர்ச்சி உள் ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின்  நாமக்கல் மாவட்ட 6 ஆவது மாநாடு, சிஐடியு மாவட்டக்குழு அலுவலகத் தில், சங்கத்தின் மாவட்டத் தலைவர்  வீ.கண்ணன் தலைமையில் ஞாயி றன்று நடைபெற்றது. மாநாடு கொடியை அங்கன்வாடி மற்றும்  உதவியாளர் சங்க மாநில உதவித் தலைவர் எல்.ஜெயக்கொடி ஏற்றி வைத்தார். ஆர்.ரேவதி அஞ்சலி தீர் மானத்தை வாசித்தார். எஸ்.மலர் கொடி வரவேற்றார். சிஐடியு மாவட்ட துணைச்செயலாளர் சு.சுரேஷ் துவக்கவுரையாற்றினார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர்  ந.வேலுசாமி, பொருளாளர் கு.சிவ ராஜ் ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர். சங்கத்தின் மாநில  பொதுச்செயலாளர் பாலசுப்பிர மணியன் சிறப்புரையாற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் ஆர்.முருகேசன் வாழ்த்திப் பேசினார். இம்மாநாட்டில், தமிழக திமுக  அரசின் தேர்தல் வாக்குறுதிப்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள், டிபிசி  தொழிலாளர். ஓஎச்டி ஆப்ரேட்டர் கள் அனைவரையும் பணி நிரந்தரம்  செய்ய வேண்டும். தூய்மைப் பணி யாளர்களுக்கு மாத ஊதியமாக  ரூ.12593 வழங்க வேண்டும். குறைந் தபட்ச கூலிச் சட்டம் அரசாணை 2(டி) 62இன்படி, சிஐடியு தொடுத்த  வழக்கில் சென்னை உயர்நீதிமன் றம் பிறப்பித்த உத்தரவின் அடிப் படையில், ஓஎச்டி ஆப்ரேட்டர்க ளுக்கு மாதம் ரூ.14593 ஊதியம் வழங்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒன்றிய, மாநில  அரசுகள் கூடுதல் நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும். பணியாளர்களி டம் பிடித்தம் செய்த பிஎப் தொகையை தாமதமின்றி வங்கி யில் செலுத்த வேண்டும். கொரோனா காலங்களில் உயிரை  பணயம் வைத்து பணி செய்த உள் ளாட்சித்துறை ஊழியர்களுக்கு அர சாணைப்படி, மூன்று மாத ஊக்கத் தொகை ரூ.15 ஆயிரம் வழங்க  வேண்டும். சம்பளம் பட்டுவாடா  சட்டத்தின்படி பிரதி மாதம் 7 ஆம்  தேதிக்குள் ஊதியம் வழங்க வேண் டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின்  நாமக்கல் மாவட்டத் தலைவராக  வீ.கண்ணன், செயலாளராக ந. வேலுசாமி, பொருளாளராக கு.சிவ ராஜ், மாவட்ட துணைத்தலைவர் களாக ஜெயக்கொடி, தனபால்,  விஜயகுமார், நல்லம்மாள், பிச்சை மணி, பாபு, துணைச்செயலாளர் களாக ரேவதி, மலர்கொடி, பிரவீன் குமார், பூங்கொடி, தேன்மொழி, லட் சுமி உட்பட 32 பேர் கொண்ட மாவட் டக்குழு தேர்வு செய்யப்பட்டது. முடிவில், எஸ்.பூங்கொடி நன்றி கூறி னார்.