tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

தெருநாய் தாக்குதலில் குழந்தை படுகாயம்

நாமக்கல், செப்.9- ராசிபுரத்தில், தெருநாய் தாக்குதலில் படுகாயமடைந்த 5  வயது குழந்தை, மருத்துவமனையில் தீவிர சிகிக்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், இந்திரா காலனிப் பகுதி யைச் சேர்ந்த சீனி – வைத்தீஸ்வரி தம்பதியின் மகள் தியா (5). இந்நிலையில், திங்களன்று மாலை வீட்டு வாசலில்  தியா தனியாக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த தெருநாய், திடீரென தியாவை கடித்து குதறியதில், அவரது இடது பக்க காது முழுவதும் சேதம டைந்தது. குழந்தையை நாய் கடிப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் கற்களால் அடித்து நாயை துரத்தி விட்டு  குழந்தையை மீட்டனர். தற்போது, சேலம் சீலநாயக்கன் பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச் சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

100 ஆண்டுகளான பள்ளிகளுக்கு பாராட்டு

சேலம், செப்.9- கெங்கவல்லி ஒன்றியத்தில் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்திய பள்ளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சேலம் மாவட்டம், கெங்கவல்லி ஒன்றியத்தில் நூற் றாண்டு விழாவை சிறப்பாக நடத்திய தொடக்கப்பள்ளிகள் உலிபுரம், செந்தாரப்பட்டி, கடம்பூர், தெடாவூா் (மேற்கு), தெடாவூர் (கிழக்கு), கொண்டயம்பள்ளி மற்றும் தம்மம்பட்டி நடுநிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சேலத்திலுள்ள தனி யார் பள்ளியில் திங்களன்று நடைபெற்ற இவ்விழாவில், மாவட்ட ஆட்சியரின் பாராட்டுச் சான்றிதழ்களை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு.கபீர் வழங்கினார்.

பூண்டு மூட்டைகள் திருட்டு?

உதகை, செப்.9- அறுவடை செய்து வைத்த, 40 பூண்டு மூட்டைகள் காணமல் போனதால் விவசாயி அதிர்ச்சியடைந்தார். நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள தேனநாடு கம்பையில் குந்த சப்பை பகுதியைச் சேர்ந்த நவீனுக்கு சொந்த மான தோட்டத்தில் ஜெகதீஷ் என்பவர் விவசாயம் செய்து  வந்தார். இவர் கடந்த சில நாட்களாக பூண்டு சாகுபடி செய் துள்ளார். அறுவடை செய்த பூண்டை  தோட்டத்தில்  விற்பனை செய்வதற்காக மூட்டைகள் அடுக்கி வைத்துள்ளார். இதில், 40க்கும் மேற்பட்ட மூட்டைகள் செவ்வாயன்று காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து, தேனநாடுகாவல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஆய் வாளர் விஜய சண்முகம், உதவி ஆய்வாளர் மகேஷ் ஆகி யோர் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். இதன் மதிப்பு சுமார் ஒன்றரை  லட்ச ரூபாய் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

பசுந்தேயிலைக்கு உரிய விலை தரக்கேட்டு காய்கறி உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானம்

உதகை, செப்.9- பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க ஒன்றிய, மாநில அரசு கள் முன் வர வேண்டும் என நீலகிரி உரு ளைக்கிழங்கு மற்றும் காய்கறி உற்பத்தியா ளர்கள் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. நீலகிரி உருளைக்கிழங்கு மற்றும் காய் கறி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ஆண்டு  பொதுக்குழு கூட்டம் தலைவர் எஸ்.ரவி  தலைமையில் செவ்வாயன்று நடைபெற்றது. இதில், கலப்படத்தை தடுக்கும் வகையில் உதகை கேரட் மற்றும் கிழங்குக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும். பசுந்தேயி லைக்கு உரிய விலை கிடைக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண் டும். விதைகள், மருந்துகள் விலை உயர் வால், விவசாயிகள் பாதிக்காதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயி கள், தங்களது விலைப் பொருட்களை விற் கும் போது வியாபாரிகள் முழுத்தொகை வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு ஒன் றிய, மாநில அரசுகள் வழங்கும் மானிய திட் டங்கள் அனைத்தையும் முழுவதுமாக பயன் படுத்த வேண்டும். மேட்டுப்பாளையம் செல் லும் விவசாயிகள் காய்கறிகளை விற்பனை செய்து திரும்பும் போது, உதகைக்கு வர போதுமான பேருந்துகள் இல்லாததால் விவ சாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, கூடு தல் பேருந்துகள் இயக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

10 ஆவது நாளாக நீடிக்கும் தடை

தருமபுரி, செப்.9- ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால், அருவியில் குளிக்க 10 ஆவது நாளாக தடை நீட்டிக்கப் பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளம் மற்றும் கர்நாடகா மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு  கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகா அணைக ளில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீர் வெளியேற்றம் அளவு கூடுவதும், குறைவதுமாக உள்ளது. இந்நிலையில், ஒகேனக்கலுக்கு ஞாயிறன்று விநாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, திங்களன்று 18 ஆயிரம் கனஅடி யாக குறைந்தது. தொடர்ந்து, செவ்வாயன்று காலை 8 மணி நிலவரப்படி, நீர்வரத்து 18 ஆயிரம் கன அடியாக நீடிக்கி றது. இருப்பினும் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி போன்ற அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்ப தும், குறைவதுமாக உள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க விதிக்கப்பட்ட தடை செவ்வாயன்று 10 ஆவது நாளை எட்டியுள்ளது.