tamilnadu

img

அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியும் ஒன்றிய அரசு

அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியும் ஒன்றிய அரமத்திய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்சு

மத்திய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சேலம், ஆக.13- அமெரிக்காவின் வரி மிரட்ட லுக்கு ஒன்றிய அரசு அடிபணியக் கூடாது என வலியுறுத்தி, மத்திய தொழிற்சங்கத்தினர் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்காவின் சுங்க வரி மிரட் டலுக்கு ஒன்றிய மோடி அரசு அடி பணியக்கூடாது. இங்கிலாந்து - இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். பொது  துறைகளையும், பொது சேவை களையும் தனியாருக்கு தாரைவா வார்க்கக்கூடாது. தொழிலாளர்க ளின் நலனை பாதுகாக்க, தொழி லாளர் திருத்தச்சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி புதனன்று  மத்திய தொழிற்சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.  சேலம் பிஎஸ்என்எல் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு எல்பிஎப் நிர்வாகி பொன்னி பழனியப்பன் தலைமை  வகித்தார். சிஐடியு சாலைப் போக்கு வரத்து சங்க மாநில துணைத்தலை வர் எஸ்.கே.தியாகராஜன் கோரிக் கைகளை விளக்கி பேசினார். இதில்  சிஐடியு மாவட்டச் செயலாளர் எ. கோவிந்தன், யூடியூசி நிர்வாகி ராமன், ஏஐசிசிடியு நிர்வாகி பாலு,  எச்எம்எஸ் நிர்வாகி பழனிச்சாமி, எல்பிஎப் நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். கோவை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள பி.எஸ். என்.எல். அலுவலகம் முன்பாக ஐக் கிய விவசாயிகள் முன்னணி மற்றும்  சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப், ஐஎன் டியுசி, எச்எம்எஸ், ஏஐசிசிடியு, எம்எல்எப், டிடிஎம்எஸ் உள்ளிட்ட  சங்கங்கள் சார்பாக 500க்கும்  மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் கே. மனோகரன், மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஏஐடியுசி மாநிலப் பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட பொதுச் செயலாளர் சி.தங்கவேல், எல்பிஎப் துரை, ஐஎன்டியுசி மாநிலச் செயலாளர் புவனேஸ்வரி, மாவட்டத் தலைவர்  சண்முகம், எச்எம்எஸ் மாநிலச் செயலாளர் ராஜாமணி, செயலா ளர் மனோகரன் மற்றும் உள்ளிட்ட ஏராளமான தொழிற்சங்க நிர்வாகி கள், ஊழியர்கள் கலந்து கொண்ட னர். உதகை நீலகிரி மாவட்டம், உதகை ஏடிசி  திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, எல்பிஎப் மாவட்டத் தலைவர்  நெடுஞ்செழியன் தலைமை வகித் தார். சிஐடியு மாவட்டப் பொருளா ளர் நவீன்சந்திரன் தொடக்க உரை யாற்றினார். இதில், சிஐடியு மாவட்டத் தலை வர் எல்.சங்கரலிங்கம், ஏஐடியுசி  மாவட்டத் தலைவர் இப்ராஹிம், செயலாளர் மூர்த்தி, எல்பிஎப் கவுன் சில் செயலாளர் ஜெயராமன் உள் பட பலர் கலந்து கொண்டனர்.