சிபிஎம் அலுவலகத்தில் சாதி மறுப்பு திருமணம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சிற்றரசு- மோனிஷா ஆகியோரின் சாதி மறுப்பு திருமணம் திருவண்ணாமலையில் உள்ள சிபிஎம் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ப. செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் மாநிலக்குழு உறுப்பினர் எம். சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். வீரபத்திரன், எம். பிரகலநாதன், என. லட்சுமணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் எஸ் .ராமதாஸ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மணமக்களை வாழ்த்திப் பேசினர்.
