குடியிருப்புப் பகுதியில் கவிழ்ந்த கார்
உதகை, ஜூலை 6- நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் கேரளம், கர்நாடகா உள் ளிட்ட வெளி மாநிலங்களிலி ருந்து பிங்கர் போஸ்ட் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக் கான சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வருகை புரிகின்ற னர். இச்சாலையில் வேகத்தடை மற்றும் வாகனங்கள் மெது வாக செல்ல வேண்டும் போன்ற விழிப்புணர்வு பதாகைகள் இல்லாததால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டு வரு கின்றன. இந்நிலையில், பிங்கர் போஸ்ட் பகுதியில் ஞாயி றன்று காலை அதிவேகமாகச் சென்ற கார் ஒன்று, குடி யிருப்புப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள தாழ்வான பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த ஐந்து பேர் மற்றும் குடியிருப்பு பகுதியில் உள்ள நபர்கள் நல்வாய்ப் பாக உயிர் தப்பினர். இப்பகுதியில் அடிக்கடி வாகனங்கள் விபத்துக்குள்ளாளாவதை தடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.