சிபிஎம் சிறப்பு மாநாடு குறித்து பிரச்சார இயக்கம்
நாமக்கல், அக்.5- சிபிஎம் சார்பில் நாமக்கல் மாவட்ட மக்கள் கோரிக்கை தொழில் பாதுகாப்பு சிறப்பு மாநாடு நடைபெற உள்ளதை யொட்டி, அதற்கான பிரச்சார இயக் கம் ஞாயிறன்று நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வருகின்ற அக்.12 ஆம் தேதியன்று நாமக்கல், எஸ்பிஎஸ் திருமண மண்டபத்தில் நாமக்கல் மாவட்ட மக்கள் கோரிக்கை தொழில் பாதுகாப்பு சிறப்பு மாநாடு நடைபெறவுள்ளது. இதில் கட்சியின் மாநிலச் செயலாளர் பி. சண்முகம், திண்டுக்கல் நாடாளு மன்ற உறுப்பினர் ஆர்.சச்சுதானந் தம், மாநிலக்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரு மான பி.டில்லிபாபு, மாவட்டச் செய லாளர் எஸ்.கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்று கின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மக்கள் கோரிக்கை சம்பந்த மாக வலியுறுத்தி நடைபெறும் இந்த மாநாடு குறித்து பொதுமக்கள் மத்தி யில் எடுத்துக் கூறும் வகையிலும், மாநாட்டின் தேவைகள், தொழில் பாதுகாப்பு குறித்த அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும் ஞாயி றன்று பிரச்சார இயக்கம் நடைபெற் றது. மார்க்சிஸ்ட் கட்சியின் குமார பாளையம் இடைக்கமிட்டி சார்பில், நடைபெற்ற பிரச்சார இயக்கத் திற்கு கட்சி நகரச் செயலாளர் எஸ். கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ஆர்.முருகேசன், மாவட்டக் குழு உறுப்பினர் என்.சக்திவேல், மூத்த தலைவர் எஸ்.ஆறுமுகம், நக ரக்குழு உறுப்பினர்கள் மற்றும் விசைத்தறி சங்க நகரச் செயலா ளர் பி.என்.வெங்கடேசன், கட்சி கிளை செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.
