tamilnadu

img

பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்லும் பேருந்துகள்

பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்லும் பேருந்துகள்

பொள்ளாச்சி, செப். 17 - பொள்ளாச்சி அருகேயுள்ள கோமங்கலம்புதூரில் பேருந்து நிறுத் தத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்து கள் நிற்காமல் செல்வதைக் கண்டித்து  பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட னர். கோவை மாவட்டம், பொள்ளாச் சிக்கு அருகில் சுமார் 5,000 மக்கள் வசிக் கும் கோமங்கலம்புதூர் கிராமம்  அமைந்துள்ளது. இங்கு சங்கம்பாளை யம், கூளநாயக்கன்பட்டி உட்பட 20-க் கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தினந்தோறும் வந்து செல்கின்றனர். இங்குள்ள கோமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும் என அரசாணை உள் ளது. இருந்தபோதிலும், பெரும் பாலான அரசு மற்றும் தனியார் பேருந்து கள் இந்த அரசாணையை மதிப்ப தில்லை. ஒவ்வொரு நாளும் கோமங்க லம் செல்லப் பேருந்தில் ஏற முயலும்  பயணிகளிடம் நடத்துநர்கள் வாக்கு வாதம் செய்து அவர்களை இறக்கிவிடு வதும் வாடிக்கையாக உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் கோமங் கலம்புதூர் பேருந்து நிறுத்தம் அருகே புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தின் வழியாகவே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பேருந்து நிறுத்தத்திற்கு வராமல் சென்றுவிடுகின்றன. இது தொடர்பாகப்  பலமுறை புகார்கள் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. கிராம மக்கள் மற்றும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல் வேறு கட்சிகள் சார்பில் பலமுறை மனுக் கள் அளிக்கப்பட்டும், பேருந்துகள் தொடர்ந்து பேருந்து நிறுத்தத்தில் நிற் பதில்லை. இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள், புதனன்று பொள் ளாச்சி-பழனி தேசிய நெடுஞ்சாலை யில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்ட னர். இதனையடுத்து, சாலை மறியல் போராட்டத்தைத் தொடர்ந்து, காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேருந்து நிறுத்தத் தில் நிற்காமல் செல்லும் பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறு தியளித்ததையடுத்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்ற னர்.