பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் பின்லாந்து மாநாட்டில் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கின்றனர்
கோவை, ஜூலை 3 – பாரதியார் பல்கலைக்கழகத் தின் உயிரியல் துறை ஆராய்ச்சி மாணவர்கள் இருவர், பின்லாந்தில் நடைபெறவுள்ள 32 ஆவது சர்வ தேச மாநாட்டில் ஆய்வுக்கட்டுரை களைச் சமர்ப்பிக்க உள்ளனர். இதுகுறித்து பாரதியார் பல் கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தெரிவித்துள் ளதாவது, பாரதியார் பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணவர்கள் பின் லாந்தில் உரையாற்றத் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளதன் மூலம் பல் கலைக்கழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர். பேராசிரியர் மற் றும் துறைத்தலைவர் ப.பரிமேலழ கனின் வழிகாட்டுதலில், மூளை வளர்ச்சி தொடர்பான ஆய்வுகளை பெனடிக்ட் மேத்யூஸ் பால் மற்றும் கௌதம் கண்ணன் ஆகியோர் இந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ள னர். இம்மாநாடு ஜூலை 7 முதல் 10 வரை பின்லாந்திலுள்ள டர்கூ பல் கலைக்கழகம் ஒன்றால் நடத்தப் படவுள்ளது. பெனடிக்ட் மேத்யூஸ் பால், தற்போது போயர் மெதா நிதியுதவில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் மூலிகை கள் மூலம் நுரையீரல் புற்றுநோய் மற்றும் ஒவ்வாமை தொடர்பான ஆராய்ச்சிகளை அவர் மேற் கொண்டுள்ளார். இவரின் ஆராய்ச் சிச் செலவுகள் இந்திய அரசின் அணுசக்தித் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் (முன்னாள் DST-SERB) சர்வதேச நிதியுதவித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட் டுள்ளது. கௌதம் கண்ணன், DST-SERB பங்களிப்புடன் செயல்பட்டு வரும் ஆய்வு நிதித் திட்டத்தில் ஆராய்ச்சி களை மேற்கொண்டுள்ளார். இவர் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மருத்துவப் பயன்கள், குறிப்பாக மூலிகைகளில் புற்றுநோய் மற்றும் ஒவ்வாமை தொடர்பான தனது ஆய்வுகளை இம்மாநாட்டில் சமர்ப்பிக்கவுள்ளார். இந்த ஆய்வுகள், உலகளாவிய சுகாதார சவால்களான புற்று நோய் மற்றும் ஒவ்வாமை போன்ற வற்றைத் தீர்ப்பதில் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மூலிகை மருத்துவத்திறனை வெளிப்படுத்து கின்றன. இது, நிலையான வளர்ச்சி இலக்கு 3-ஐ (SDG 3) அடைய இந்தியாவின் பங்களிப்பைக் குறிப் பிடுகிறது. இந்த சர்வதேச அங்கீகா ரம் பாரதியார் பல்கலைக்கழகத் தின் ஆராய்ச்சியை உலகளவில் வெளிப்படுத்தும் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. இவ்விரு ஆராய்ச்சி மாணவர்களும் பல் கலைக்கழக அறிவியல் புல முதன் மையர் மற்றும் உயிரியல் துறை தலைவர் ப.பரிமேலழகன், பதிவா ளர் மற்றும் துணைவேந்தர் குழு உறுப்பினர்கள் ஆகியோரைச் சந்தித்து வாழ்த்துகளை பெற்ற னர். இவர்களைப் பாராட்டிய பல் கலைக்கழகத் தலைவர், மூலிகை சார்ந்த ஆராய்ச்சியை மேற் கொண்டு புதிய மருத்துவத் தேவை களைப் பூர்த்தி செய்ய உயிரியல் துறையின் தொடர் முயற்சிகள் மூலம் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மேலும் உயரும் என மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.