தாட்கோ கடன் வழங்க மறுக்கும் பேங்க் ஆப் இந்தியா: மாவட்ட ஆட்சியரிடம் புகார்
ஈரோடு,ஆக. 26- பேங்க் ஆப் இந்தியா வங்கியில் தாட்கோ கடன் வழங்க மறுப்பதாக பட்டியலினத்தைச் சேர்ந்த நபர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தார். இதுகுறித்து அவர் அளித்த மனுவில், ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், கருப்பம்பாளையம், ஏடி காலனியில் வசித்து வருபவர் பூபாலகுமார். இவர் 2024-25 ஆம் ஆண்டு தாட்கோவில் தொழில் கடன் (பன்றி வளர்ப்பு) கேட்டு விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பம் ஏற்கப்பட்டது. கடன் வழங்க பேங்க் ஆப் இந்தியா நல்லாம்பட்டி கிளைக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பூபாலகுமார் வங்கிக்கு பலமுறை சென்றுள்ளார். ஆனால் கடன் வழங்கப்பட வில்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார். அதனைத் தொடர்ந்து தாட்கோ மேலாளரும், முன்னோடி வங்கி மேலாளரும் நேரில் சென்று பேசினர். அத னைத் தொடர்ந்து நிபந்தனையின் பேரில் இசைவு கடிதம் கொடுக்கப்பட்டது. அதன்படி ரூ.1.25 லட்சம் செலவில் (போர் வெல்) ஆழ்துளை கிணறு, ரூ.1.40 லட்சம் மதிப்பில் கொட்டகை மற்றும் வேலி அமைத் தார். இதற்கிடையில் இசைவு கடிதம் கொடுத்த வங்கி மேலாளர் பணியிட மாறுத லில் சென்றுவிட்டார். மன உளைச்சலுக்குள்ளான பயனாளி, தன் மீது நம்பிக்கை இல்லாவிட்டால் பண்ணை அமைத்திருக்கும் இடத்தின் கிரய பத்திரத்தை பிணையாக தருகிறேன் என்று கூறினார். ஆனாலும் புதிய மேலாளர் கடன் தருவதாக இல்லை. எனவே, வேறு வழியில் லாத நிலையில் கடன் பெறும் வரை வங்கி முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக பூபாலகுமார் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் தெரி வித்துள்ளார்.
நலத்திட்ட உதவிகள்
ஈரோடு, ஆக. 26- ஈரோட்டில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத் திட்ட உதவிகளை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார். ஈரோடு மாவட்ட ஆட்சி யர் அலுவலக கூட்டரங்கில் தூய்மைப் பணியாளர் நல வாரியத்தின் மூலம் 50 பேருக்கு ரூ.42.66 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் சு. முத்துசாமி வழங்கினார். இதில், தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரியம் ஆறுச்சாமி, மாவட்ட ஆட்சி யர் ச.கந்தசாமி, மாநிலங்க ளவை உறுப்பினர் அந்தியூர். ப.செல்வராஜ், மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், மாந கராட்சி ஆணையாளர் அர் பித் ஜெயின், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.