tamilnadu

img

உணவுப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

உணவுப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

தருமபுரி, அக்.12- தீபாவளி பண்டிகையை யொட்டி, பலகாரம் தயாரிப் பாளர்களுக்கு உணவு பாது காப்பு குறித்து விழிப்புணர்வு  ஏற்படுத்தப்பட்டது. தீபாவளி இனிப்பு, காரம்  தயாரிப்பாளர்களுக்கான உணவு பாதுகாப்பு விழிப்பு ணர்வு கூட்டம் தருமபுரி ராமா போடிங் மீட்டிங் ஹாலில் சனி யன்று நடைபெற்றது. தருமபுரி நகராட்சி, ஒன் றியம் மற்றும் பென்னாகரம் ஒன்றிய உணவுப்  பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் வரவேற் றார். ஹோட்டல் மற்றும் பேக்கரி சங்க செய லாளர் வேணுகோபால், ஒன்றிய உணவுப் பாது காப்பு அலுவலர்கள் சரண்குமார், அருண்,  திருப்பதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார், தலைமையில் விழிப்புணர்வு மற்றும் உணவுப் பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்படை பயிற்சி நடைபெற்றது. உணவு  பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு சான்று கள் இல்லாமல் உணவுப் பொருட்கள், தீபா வளி பலகாரங்கள் தயாரிப்பது மற்றும் விநி யோகிப்பது, விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். மாவட்டத்தில் அனைத்து உணவு வணிகர்கள், பேக்கரிகள், தயாரிப் பாளர்கள், விநியோகிப்பாளர்கள், விற்பனை யாளர்கள் தற்காலிக மற்றும் தனியார் மண் டபங்களில் வாடகைக்கு பலகாரம் தயா ரிப்பு செய்து விற்பனை செய்யக்கூடியவர் கள் என அனைவரும் உணவு பாதுகாப்பு துறை அனுமதி பெற்று உரிய உணவுப் பாது காப்பு உரிமச் சான்றிதழ் பெற்று வணிகம்  செய்தல் வேண்டும் என அறிவுறுத்தப்பட் டது.