விழிப்புணர்வு பேரணி
நாமக்கல், செப்.27- இந்திய சைகை மொழி தினம் மற்றும் சர்வதேச காது கேளாதோர் தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணி நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக செப்.23 முதல் செப்.29 வரை சர்வதேச காது கேளாதோர் தினம் மற்றும் இந்திய சைகை மொழி வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகி றது. இதனையொட்டி, மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி சைகை மொழி விழிப்புணர்வு பேரணியை வெள்ளியன்று தொடங்கி வைத்தார். இப்பேரணி பழைய அரசு தலைமை மருத்துவமனையில் தொடங்கி பழைய பேருந்து நிலையம் வரை சென்று மீண்டும் மருத்துவமனையை வந்தடைந்தது. இதில் காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாதோர் சங் கத்தினர், அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
