போத்தீஸ் கடையில் 5 ஆவது நாளாக அதிகாரிகள் சோதனை
கோவை. செப். 16- கோவையில் உள்ள போத்தீஸ் சொர்ண மஹால் நகைக் கடையில் 5 ஆவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை தொடர்கிறது. தமிழகத்தில் உள்ள போத்தீஸ் ஜவுளி கடைகள், போத்தீஸ் நகைக் கடை மற்றும் போத்தீஸ் நிறுவனங் கள் உள்ள பல இடங்களில் வருமான வரித்துறை அதி காரிகள் கடந்த வெள்ளியன்று முதல் வியாழனன்று வரை தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்ற னர். அதன்படி கோவையில் ஒப்பணக்கார வீதி, காந்தி புரம் பகுதியில் உள்ள போத்தீஸ் ஜவுளி கடைகளிலும் மூன்றாவது நாளாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், திங்களன்று கோவையில் உள்ள இரண்டு ஜவுளி கடைகளில் சோதனை நிறைவடைந் தது. இரண்டு கடைகளையும் மூன்று நாட்களாக பூட்டப்பட்டு இந்த சோதனை நடைபெற்று வந்தது. கோவையில் இருந்த இரண்டு போத்தீஸ் துணிக் கடைகள் மூன்று நாட்களாக நடந்த சோதனையில் முக் கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் ஒப்பணக்கார வீதியில் உள்ள போத்தீஸ் சொர்ண மஹால் நகைக் கடையில் செவ்வாயன்று 5 ஆவது நாளாக தொடர்ந்து வருமான வரித்துறை அதி காரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் செவ்வாயன்று நடைபெற்ற சோதனையில் இரண்டு குழுக்களாக சென்ற வருமான வரித்துறை அதி காரிகள், முக்கிய ஆவணங்களை நான்கு பேர் கொண்ட ஒரு குழுவினர் ஸ்கேன் செய்து எடுத்துச் சென்றதாக வும், மேலும் ஒரு குழுவினர் ஆவணங்கள் குறித்து தொடர் விசாரணை நடத்தி சரிபார்ப்பு பணிகளும் நடை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப் பிடத்தக்கது.