tamilnadu

img

மாற்றுத்திறனாளி மீதான தாக்குதல்

மாற்றுத்திறனாளி மீதான தாக்குதல்

தேசியக்கொடியுடன் காவல் நிலையம் முற்றுகை

சேலம், செப்.10- மாற்றுத்திறனாளி மீது தாக்குதல்  நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அவரது உறவினர் கள் தாரமங்கலம் காவல் நிலை யத்தை தேசியக் கொடியை ஏந்திய வாறு முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே குறுக்குப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் எல்லப்பன். காது கேட் காத, வாய் பேச முடியாத மாற்றுத்திற னாளியான இவர், கட்டிட வேலைக்கு  சென்று வருகிறார். கடந்த செப்.4 ஆம்  தேதி வேலைக்கு செல்லும் போது, அங்குள்ள பெட்ரோல் பங்கில் தனது  இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல்  போட்டுள்ளார். அப்போது, காருக்கு பெட்ரோல் அடிக்க வந்தவர்கள், ஒலி (ஹாரன்) எழுப்பியுள்ளனர். ஆனால், எல்லப்பனுக்கு சரியாக காது கேட்காததால் அப்படியே நின்றுள்ளார். இதனால், காரில்  இருந்த ஐந்து பேர் ஆத்திரமடைந்து, எல்லப்பனை சரமாரியாக தாக்கி னர். இந்த தாக்குதலில் படுகாய மடைந்த அவர் ஓமலூர் அரசு மருத்து வமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை  பெற்று வருகிறார். இதுகுறித்து அவ ரது தந்தை பூஞ்சோலை கொடுத்த புகாரின் பேரில், தாரமங்கலம் காவல்  துறையினர், வழக்குப்பதிவு செய்து  விசாரித்து வந்தனர். இந்நிலையில், செவ்வாயன்று எல்லப்பனின் மனைவி மற்றும்  குழந்தைகள், உறவினர்கள், தேசியக் கொடியை ஏந்தியவாறு காவல் நிலை யத்தை முற்றுகையிட்டு போராட்டத் தில் ஈடுபட்டனர். அப்போது, ‘உண்மையான ஐந்து குற்றவாளிகள்  யாரென்று உங்களுக்கு (போலீசார்) நன்றாகவே தெரியும். ஆனால், அடையாளம் தெரியாதவர்கள் என்று பொய்யாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே, உடனடி யாக உண்மையான குற்றவாளி களை கைது செய்ய வேண்டும் என  முழக்கங்களை எழுப்பினர். இதை யடுத்து பேச்சுவார்த்தை நடத்தி போலீசார், கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரித்து வரு கிறோம். சம்பந்தப்பட்டவர்களை விரைவில் கைது செய்வதாக உறுதி யளித்தனர். இதனையடுத்து அனை வரும் அங்கிருந்து கலைந்து சென்ற னர்.