ஏடிஎம் கொள்ளை: 6 பேருக்கு சிறை
நாமக்கல், அக்.14- திருச்சூரில் நடந்த ஏடிஎம் கொள்ளை வழக்கில் தொடர்புடைய 6 பேருக்கு திருச்செங்கோடு கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் செவ்வாயன்று தீர்ப்பு வழங்கியது. கடந்த செப்டம்பர் 27, 2024 அன்று, திருச்சூர் ஏடிஎம் கொள்ளையர்கள் வெள்ளை நிற க்ரெட்டா கார் மற்றும் கண்டெய்னர் லாரியில் வருவதாக நாமக்கல் போலீசா ருக்கு தகவல் கிடைத்தது. குமாரபாளையம் அருகே வாகன சோதனையின்போது தப்பிச் செல்ல முயன்ற கொள்ளையர்களை போலீசார் விரட்டிச் சென்று சன்னி யாசிபட்டி அருகே பிடித்தனர். இந்த நடவடிக்கையின்போது, ஆய்வாளர் தவமணி யைத் தாக்கி தப்ப முயன்ற ஓட்டுநர் ஜுமாந்தினை போலீ சார் துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்தார். மற்றொருவரான அசார்அலி காயமடைந்தார். மேலும், இர்பான், சௌக்கீன் கான், முகமது இக்ரம், சபீர், முபாரக் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமி ருந்து ரூ. 67.82 லட்சம் மற்றும் க்ரெட்டா கார் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கு திருச்செங்கோடு கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இறுதிகட்ட விசாரணை நீதிபதி மாலதி முன்பு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, தீர்ப்பளித்த நீதிபதிவழக்கில் தொடர்புடைய 6 பேருக் கும் சிறை தண்டனை விதித்தார். இதில், இர்பான் சக்கூர் மற்றும் அசார்அலி ஆகியோருக்கு 12 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 5,000 அபராதம். ஷபீர்கான், சௌக்கீன், முகம்மது இக்ரம், முபாரிக் ஆகியோருக்கு 24 ஆண்டு கள் சிறை மற்றும் ரூ. 3,000 அபராதம் என தீர்ப்பளித் தார். இதனையடுத்து, தண்டனை பெற்ற அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பட்டுக்கூடு ஏலம் தருமபுரி, அக்.14- தருமபுரி, நான்குசாலை பகுதியில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடு அங்காடி யில் திங்களன்று ஏலம் நடை பெற்றது. சுமார் 20 விவசா யிகள் 1,273.500 கிலோ வெண் பட்டுக் கூடுகளை விற்ப னைக்கு கொண்டு வந்தனர். தரத்திற்கேற்ப கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.705க்கும், குறைந்த பட்சமாக ரூ.398க்கும், சராச ரியாக ரூ.622.26க்கும் நிர்ண யம் செய்யப்பட்டது. மொத் தம் ரூ.7 லட்சத்து 96 ஆயி ரத்து 895க்கு வர்த்தகம் நடை பெற்றதாக ஏல அங்காடி அதிகாரிகள் தெரிவித்தனர்.
கழிவுநீர் சுத்திகரிப்புத்தொட்டி: முற்றுகை அறிவிப்பு
அவிநாசி, அக்.14– உரிய அனுமதி பெறாமல் நல்லாற்றில் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி அமைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாக மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட கோவை - திருப்பூர் சாலையில் அமைந் துள்ள நல்லாற்றில் உரிய அனுமதி பெறாமல் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி கட்டப்படுவ தைக் கண்டித்தும், மழையால் சேதமடைந்த சாக்கடை கால்வாயைத் தரமான முறையில் சீரமைக்கக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின், நகராட்சி கிளைகள் சார்பில் செப்டம்பர் 17ஆம் தேதி நகராட்சி அலுவ லகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இரண்டு தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் நல்லாறு பகுதியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதில், அங் குள்ள சாக்கடை கால்வாய் இடிந்து சேதம டைந்தது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர்மன்ற உறுப்பினர் சுப்பிரமணி யம், ஒன்றியக்குழு உறுப்பினர் பாலசுப்பிர மணியம் ஆகியோர் பார்வையிட்டனர். சேதமடைந்த சாக்கடை கால்வாயை மீண் டும் தரமான முறையில் கட்டி எழுப்ப வேண் டும். அத்துடன், தரம் இல்லாமல் கால்வாய் கட்டப்பட்டிருந்தால் ஒப்பந்ததாரர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்” என வலியுறுத்தினர். நல்லாற்றில் விதிமீறி அமைக்கப்படும் கழிவு நீர் சுத்திகரிப்பு தொட்டியைக் கண்டித்தும், சேதமடைந்த கால்வாயைச் சீரமைக்கக் கோரியும் செப்டம்பர் 17ஆம் தேதி திருமுரு கன்பூண்டி நகராட்சி அலுவலகத்தை முற்று கையிடுவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகராட்சி கிளைச் செயலாளர் கூட்டத் தில் முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில், சிபிஎம் ஒன்றியச் செய லாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்டக்குழு உறுப் பினர் பழனிசாமி, நகர்மன்ற உறுப்பினர் சுப்பி ரமணியம் மற்றும் கிளைச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
டெங்கு: 9 மாதங்களில் 212 பேர் சிகிச்சை!
கோவை, அக்.14- கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 9 மாதங்களில் டெங்கு காய்ச்சலுக்கு 212 பேர் சிகிச்சை பெற்றனர் என மருத்துவ மனை முதல்வர் கீதாஞ்சலி தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் பருவ மழை காலங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிக ரித்து காணப்படும். அதன்படி தற்பொழுது கோவையில் மழை பரவலாக பெய்து வருகி றது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவத் தொடங்கி உள்ளது. இதனை தடுக்க மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் கிருமி நாசினி மருந்து தெளித் தல், உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கோவை அரசு மருத்துவமனையில் தற்பொ ழுது டெங்கு காய்ச்சலுக்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி கூறும் போது, கோவை மாவட் டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு பெரிய அள வில் இல்லை, இருப்பினும் டெங்கு பாதித்த வர்கள் சிகிச்சை அளிக்க 15 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு தயார் நிலையில் உள்ளது. தற் பொழுது 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்ற னர். நடப்பாண்டில் கடந்த 9 மாதங்களில் மட்டும் 212 பேர் சிகிச்சை அளிக்கப்பட்டுள் ளது. 4 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். கடந்த ஜூலை மாதம் மட்டும் 41 பேர் அதிக பட்சமாக பாதிக்கப்பட்டனர் என்றும் கூறி னார்.
ரயில் நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்
கோவை, அக்.14-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்ல கோவை ரயில் நிலையத்
தில் குவிந்த வடமாநில தொழிலாளர்களை நீண்ட வரிசையில் நிற்க வைத்து, ரயில்வே
போலீசார் பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
தொழில் நகரமான கோவை மாவட்டத்
தில் பீகார், ஜார்க்கண்ட், உத்திரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த ஏரா
ளமான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தீபா
வளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்க
ளுக்கு செல்வதற்காக வட மாநில தொழிலா
ளர்கள் முன்கூட்டியே ஆயத்தமாகி வருகின்
றனர். இதனால் கோவையில் வாங்கிய
பொருட்களுடன் புலம்பெயர் தொழிலாளர்
கள் ரயில் நிலையத்தில் குவிந்து வருகின்ற
னர். குறிப்பாக கோவையிலிருந்து தன்பாத்
செல்லும் ரயிலில் செல்ல ஜார்கண்ட் மாநில
தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். ஒரே நேரத்தில் ரயில் நிலையத்
தில் குவிந்த புலம்பெயர் தொழிலாளர்களை
வரிசையில் நிற்க வைத்து ரயில்வே பாது
காப்பு படை போலீசார் ரயில் பெட்டிகளில்
ஏற்றி அனுப்பி வைத்தனர். அதேபோல் ரயி
லில் பட்டாசு போன்ற வெடிபொருட்களை எடுத்துச் செல்லாமல் கண்காணிக்கும் வகை
யில் ரயில் நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகளின் உடமைகளும் ஸ்கேனர் கருவி
மூலம் சோதனை செய்யப்பட்டு அதன் பின்
னரே அனுமதிக்கப்பட்டனர்.