மாற்றுத்திறனாளிகள் சங்க மாநாடு
ஈரோடு, ஆக.19- மாற்றுத்திறனாளிகள் சங்க ஈரோடு நகர மாநாட்டில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் ஈரோடு நகர 2 ஆவது மாநாடு, மாநகராட்சி திருமண மண்டபத்தில் ஞாயி றன்று நடைபெற்றது. எம்.ஆனந்தன் தலைமை வகித்தார். அம்மணி அம்மாள் கொடியேற்றினார். மாவட்டச் செயலாளர் ப.மாரிமுத்து துவக்கவுரையாற்றினார். மாவட்டப் பொருளா ளர் வி.ராஜூ வாழ்த்திப் பேசினார். மாநிலப் பொருளாளர் கே.ஆர்.சக்கரவர்த்தி நிறைவுரையாற்றினார். இதையடுத்து சங்கத்தின் நகரத் தலைவராக எம்.ஆனந்தன், செயலாளராக எஸ்.ரேணுகா, பொருளாளராக எஸ்.செந்தில்குமார் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். ஈஸ்வரி நன்றி கூறினார்.