tamilnadu

img

கலைஞர் 7 ஆம் ஆண்டு நினைவஞ்சலி

கலைஞர் 7 ஆம் ஆண்டு நினைவஞ்சலி

திருப்பூர், ஆக்.7- மறைந்த முன்னாள் முதல்வரும்,  திமுக தலைவருமான  மு.கருணாநிதியின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி  திருப்பூர் மற்றும் உடுமலையில் வியாழனன்று நடை பெற்றது.  தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, வியாழனன்று திருப்பூர் ரயில் நிலையம் அருகில் பெரியார், அண்ணா சிலை  முன்பாக, திருப்பூர் மத்திய மாவட்டச் செயலாளர் க.செல்வ ராஜ் எம்எல்ஏ., தலைமையில் கருணாநிதி உருவப் படத்திற்கு  மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.  இதில், திமுக நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட  கட்சியினர் திரளாக பங்கேற்றனர். அதேபோல் உடுமலை பழைய பேருந்து நிலையத்தில்  முன்பு தொடங்கிய அமைதிப் பேரணி மத்திய பேருந்து  நிலையத்தில் நிறைவடைந்தது. பின்னர் அங்கு வைக்கப் பட்டிருந்த கலைஞரின் உருவப் படத்திற்கு  திமுக மாவட்டச் செயலாளர்  பத்மநாபன், நகரச் செயலாளர் சி.வேலுச்சாமி  உள்ளிட்ட திரளானோர்  மலர் தூவி மரியாதை செலுத்தி னார்.