tamilnadu

img

காவல் அலுவலகத்தில் கூடுதல் டிஜிபி ஆய்வு

காவல் அலுவலகத்தில் கூடுதல் டிஜிபி ஆய்வு

நாமக்கல், செப்.19- தமிழக காவல்துறை கூடுதல் இயக்குநர் டேவிட்சன் ஆசிர்வாதம் நாமக்கல் உட் கோட்ட காவல் அலுவலகத்தில் ஆய்வு மேற் கொண்டார். தமிழக காவல்துறை கூடுதல் இயக்கு நர் டேவிட்சன் ஆசிர்வாதம் நாமக்கல் உட் கோட்ட காவல் அலுவலகத்தில் வியாழ னன்று ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக காவல்துறையினரின் அணிவகுப்பு மரியா தையை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து நாமக்கல்லில் உள்ள  7 காவல் நிலையங்க ளில் காவல் ஆய்வாளர்களிடம் காவல் நிலை யம் மற்றும் குற்ற நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டார். நிலுவைவில் உள்ள குற்ற வழக்குகள் மற்றும் நீதிமன்ற வழக்கு கள் ஆகியவற்றை விரைந்து முடிக்க உத்தர விட்டார் . இதனையடுத்து  டேவிட்சன் ஆசிர்வா தம் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ கத்தில் தற்போது குற்றங்கள் குறைய, காவல் துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குற்றங்களை குறைக்க பொது மக்கள் சிசிடிவி கேமராக்களை மக்கள் அதி கம் நடமாட்டம் உள்ள பகுதியில் பயன்ப டுத்த வேண்டும். குற்ற செயல்கள் நடைபெறு மென யூகிக்கப்படும் இடங்களில் அதிகள வில் பொருத்தி அதை கண்காணிக்க வேண் டும். தற்போது தமிழக அளவில் காவல்துறை துணை உட்கோட்ட பகுதிகளை ஆய்வு செய்து வருகிறோம். இதுவரை 100-க்கும்  மேற்பட்ட சப் டிவிஷன் ஆய்வு மேற்கொண்டு  உள்ளோம். அங்கு எவ்வாறு போலீசார் பணி யாற்றுகிறார்கள், தேங்கியுள்ள வழக்குகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருகி றோம். போக்சோ சட்டத்தில் தற்போது குற் றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.  அது சூழ்நிலைக்கு தகுந்தார் போல் ஏறும்  இறங்கும். இந்த விஷயத்தில் நீதிமன்ற தீர்ப்பு  மூலமாக நிறைய வழக்குகள் காவல்து றைக்கு சாதகமான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது, என்றார்.