கோவையில் பெண் மீது அடையாளம் தெரியாத நபர்கள் ஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை அம்மன் குளம் பகுதியில் 34 வயது பெண் ராதா என்பவர் கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் அடையாளம் தெரியாத நபர்கள் அவர் முகத்தில் ஆசிட் வீசி விட்டு தப்பி ஓடினர். இதில் படுகாயம் அடைந்த ராதா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.