புதிய நடைமுறைகளை கைவிடுக: அங்கன்வாடி ஊழியர்கள் முழக்கம்
தருமபுரி, ஆக.21- அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய நடைமுறையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ் நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கன்வாடி மையப்பணி களை செய்வதற்கு 5ஜி செல் போன், 5ஜி சிம்கார்டு வழங்க வேண் டும். அந்தந்த கிராமத்தின் இணைய சேவைக்கேற்ப சிம்கார்டு வழங்க வேண்டும். பயனாளிகளுக்கு சத்து மாவு வழங்குவதற்கு முகப்பதிவு புகைப்படம் முறையை கைவிட வேண்டும். இகேஒய்சி, ஆதார் எண், ஒடிபி மற்றும் எப்ஆர்எஸ் முறையை முற்றிலும் கைவிட வேண்டும், உள்ளிட்ட கோரிக்கை களை தமிழ்நாடு அங்கன்வாடி ஊழி யர் மற்றும் உதவியாளர் சங்கத்தி னர் வியாழனன்று தருமபுரி மாவட் டம் முழுவதும் அனைத்து வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவ லகங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் ஒன்றியச் செயலாளர் கலா தலைமை வகித்தார். சிஐடியு மாநி லச் செயலாளர் சி.நாகராசன், சங் கத்தின் மாவட்டத் தலைவர் சுமதி, துணைத்தலைவர் காளீஸ்வரி உட் பட பலர் கலந்து கொண்டனர். நல் லம்பள்ளியில் மாநிலச் செயலா ளர் லில்லிபுஷ்பம், சிஐடியு மாவட் டச் செயலாளர் பி.ஜீவா ஆகி யோர் பங்கேற்றனர். காரிமங்கலத்தில் ஒன்றியச் செயலாளர் கண்மணி தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் கவிதா, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.தெய்வானை, சமூக நலத்துறை பணியாளர் சங்க மாவட்டப் பொருளாளர் வினோத் ஆகியோர் பங்கேற்றனர். பாலக் கோட்டில் மாவட்டப் பொருளாளர் தெய்வானை, பென்னாகரத்தில் ஒன்றியத் தலைவர் சுமதி, கடத்தூ ரில் மாவட்ட இணைச்செயலாளர் சத்யா, மொரப்பூரில் துணைத் தலைவர் தேவகி, பாப்பிரெட்டிப் பட்டியில் துணைத்தலைவர் ஆல் வியா ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில் சிஐடியு மாநிலக்குழு உறுப்பி னர் சி.கலாவதி, மாவட்ட இணைச் செயலாளர் ஆனஸ்ட்ராஜ், சங்கத் தின் மாவட்ட இணைச்செயலாளர் ஜான்சிராணி, சத்துணவு ஊழியர் சங்க தலைவர் சி.காவேரி, சமூக நலத்துறை பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் பழனிசாமி உட் பட பலர் கலந்து கொண்டனர். நாமக்கல் நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகம் முன்பு, சங்கத்தின் மாவட்டத் தலை வர் பாண்டிமாதேவி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டப் பொருளாளர் மும்தாஜ், ஒன்றியச் செயலாளர் செல்வி, துணைத்தலைவர்கள் சகுந்தலா, கவிதா, இணைச்செய லாளர் சங்கீதா, அரசு ஊழியர் சங்க முன்னாள் செயலாளர் பாலசுப்பிர மணியம் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.