tamilnadu

img

மக்களாட்சிக்கான புதிய பாதை - இதோ உங்கள் கைகளில் - ஐ.வி.நாகராஜன்

மக்களாட்சிக்கான புதிய பாதை - இதோ உங்கள் கைகளில்! 

73 புத்தகங்களையும், 400க்கும் மேற்பட்ட கட்டு ரைகளையும் எழுதியுள்ள பேராசிரியர் க.பழனித்துரை “கட்சி அரசியலிலிருந்து மக்கள் அரசியல்” என்ற நூலை எழுதியுள்ளார். இது மாற்று அரசியலுக்கு ஒரு அறிமுக மான நூல்.  புதிய பஞ்சாயத்து அரசாங்கம் உருவாக்கப்பட்ட பிறகு பல கையேடுகளை தயாரித்து தமிழ்நாடு முழுவதும் பயிற்சி அளித்திருக்கிறார்.  முக்கிய பிரச்சனை  இன்றைய சூழலில் மக்களை நுகர்வோராகவும், வாக்காளராகவும், பயனாளிகளாகவும், மனுதாரராக வும் பார்த்து 60 சதவீத மக்களை முன்னேற்றத்திலிருந்தும் ஆளுகை யிலிருந்தும் ஒதுக்கி வைத்து, அவர்களுக்குப் பிச்சை போட்டு அவர்களுடைய சுயமரியாதையைக் குலைத்து வாழவைக்கும் ஒரு வாழ்க்கைச் சூழலை உருவாக்கி விட்டோம்.  மக்கள் முன்னேற்றத்திலும் ஆளு கையிலும் குடிமக்கள் பங்கேற்காத வரையில், இந்தியாவின் முன்னேற் றம் என்பது ஒரு குறிப்பிட்ட வர்க்க த்தைச் சார்ந்ததாகத்தான் இருக்கும்.  தீர்வு - உள்ளாட்சியை வலுப்படுத்துதல்  மக்களாட்சியின் மாண்பு என்பது  மக்கள் கையில்தான் இருக்கிறது. மாண்புடைய மக்களை உருவாக்கி னால்தான் அரசை மாண்புடையதாக மாற்ற முடியும். இதற்கு இன்று உரு வாக்கப்பட்டுள்ள உள்ளாட்சி பெருமளவில் உதவும்.  உள்ளாட்சியில் இருக்கும் வாய்ப்புகளை ஏழைகளுக்குத் தெரி விக்கவில்லை என்பதுதான் பிரச்ச னை. உள்ளாட்சிக்கான மக்கள் இயக்கம் கட்ட வேண்டும் என்ற  வாதத்தை தொடர்ந்து முன்வைக் கிறார் நூலாசிரியர்.  கட்சி அரசியலைக் கடந்து...  மக்களாட்சி, தேர்தலுக்கு மேல்  வியாபிக்க முடியாமல் தேங்கி  நிற்கிறது. தேர்தலை மையப்படுத்திச் செயல்பட்டுவந்த கட்சி அரசியலும் தேங்கி நிற்கிறது. இந்த இரண்டும் தேங்கி நிற்பதால், அரசியல் துர்நாற்றம் எடுக்கத் தொடங்கி விட்டது.  இந்தச் சூழலிலிருந்து வெளிவர மக்களாட்சியில் சில புதுமைகளைக் கொண்டுவர வேண்டும். அது கட்சி  அரசியலைத் தாண்டி மக்கள் அர சியலுக்குச் செல்ல வேண்டும். இதற்கான வாய்ப்புகள் புதிய உள்ளாட்சி அரசாங்கத்தில் உரு வாக்கப்பட்டுள்ளது.  உள்ளாட்சியை வலுப்படுத்தி னால், மக்களாட்சி வலுப்படும். அதில் குறிப்பாகப் புறக்கணிக்கப்பட்ட வர்கள், விளிம்பு நிலை மக்கள், ஏழைகள், பெண்கள் அனைவரும் ஏற்றம் பெறுவார்கள்.  கட்சி அரசியலைக் கடக்க நமக்கு இன்று பொது விவாதம், பொதுத் தளத்தில் உருவாக்கப்பட வேண்டும். அதுதான் இந்த நூலின் மையக்கரு.  கட்சி அரசியலிலிருந்து மக்கள் அரசியல்   ஆசிரியர்: பேராசிரியர் க.பழனித்துரை   வெளியீடு: புத்தாநத்தம், திருச்சி மாவட்டம்   விலை: ₹150   முதல் பதிப்பு: 2022