உணவகத்தில் தீ விபத்து
நாமக்கல், செப். 7- பள்ளிபாளையம் அருகே உள்ள உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீயணைப்பு வாகனத்தில் தண்ணீர் தீர்ந்த தால், பொதுமக்களே களத்தில் இறங்கி தீயை அணைத்த னர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலையில், வைத்தியலிங்கம், சீனி ஆகியோர் 10 வரு டத்திற்கு மேலாக உணவகத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஞாயிறன்று காலை உணவகத்தின் வெளியே புரோட்டா போடும் அடுப்பின் அருகே புகை கூண்டின் வழியாக வெளியேறிய சிறு தீப்பொறி எதிர்பாராத விதமாக ஓலை மற்றும் இரும்பு தகரம் மூலம் வேயப்பட்ட இடத்தில் விழுந்தது. இதில் மள மளவென தீ வேகமாக பரவியது. இதனையடுத்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தீய ணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். வெப்படை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்க முயன்றனர். தீ கட்டுப்படுத்த முடியாத அள விற்கு இருந்ததால் தீயணைப்பு வாகனத்தில் இருந்த தண்ணீர் முழுமையாக தீர்ந்தது. மற்றொரு தீயணைப்பு வாகனமும் வருவதற்கு தாமத மானதால், அங்கிருந்த மக்கள் கையில் கிடைத்த பக்கெட், பிளாஸ்டிக் குடம், உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு தீ மேலும் பரவாமல் இருக்க தீயை அணைக்கும் முயற்சி யில் இறங்கினர். இருந்தபோதிலும் கடை மொத்தமாக எரிந்து சாம்பலானது. இந்த தீவிபத்து குறித்த தகவல் அறிந்த பள்ளி பாளையம் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற் கொண்டனர்.