tamilnadu

img

27,500 ஏக்கர் பாசனத்திற்குரிய 96 ஷட்டர்கள் அடைப்பு: அமராவதி கால்வாயில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

27,500 ஏக்கர் பாசனத்திற்குரிய 96 ஷட்டர்கள் அடைப்பு: அமராவதி கால்வாயில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

உடுமலை,  ஜூலை 11- அமராவதி அணையின் புதிய பாசனப் பகுதியில்  27 ஆயிரத்து 500  ஏக்கருக்கு தண்ணீர் கொண்டு செல் லும் 96 ஷட்டர்களை விதிகளுக்கு புறம்பாக அடைத்து வைத்து, விவ சாயிகளை வஞ்சிக்கும் வகையில் கடந்த ஒரு வாரமாக பாசனம் இல் லாத பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு சொல்லப்படுகிறது. இதைத்தடுக்க வலியுறுத்தி வெள் ளியன்று விவசாயிகள் அமராவதி  பிரதான பாசனக் கால்வாயில்  இறங்கி போராட்டம் நடத்தினர். அமராவதி அணையில் இருந்து புதிய பாசனத்திட்டத்திற்கு பிரதான கால்வாய் மூலம் விளைநிலங்க ளுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வரு கிறது. இந்த பிரதானக் கால்வாயில் 96 கிளை வாய்க்கால்கள் உள்ளன. இதன் மூலம் சுமார் 27 ஆயிரத்து 500 ஏக்கர் பாசனம் பெறுகிறது. அம ராவதி அணை கட்டிய காலத்திலி ருந்து இதுவரை இல்லாத புதிய நடைமுறையாக பிரதானக் கால்வா யில் இருக்கும் 96 கிளை வாய்க்கா லுக்கு செல்லும் ஷட்டர்களை முழு மையாக அடைத்து வைத்து, ஆயக் கட்டு இல்லாத பகுதிக்கு முறை கேடாக  தண்ணீர் கொண்டு செல்லப் படுகிறது.  இதனால் நடைமுறையில் இருக் கும் ஆயக்கட்டு பாசனத்திற்குட் பட்ட கடைமடை விவசாயிகள் தண் ணீர் கிடைக்காமல் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. விதிகளுக்கு புறம் பாக அனைத்து மடைகளையும் அடைத்து ஆயக்கட்டு இல்லாத பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல் வதை ஆயக்கட்டு விவசாயிகள் ஏற்கவில்லை.  சட்டவிரோதமாக அடைக்கப்பட்டுள்ள அனைத்து மடைகளையும், கடை மடை வரை யில் தண்ணீர் செல்லும் வகையில் உடனடியாக திறந்து விட வலியு றுத்தி அமராவதி பிரதான வாய்க் காலில் இறங்கி விவசாயிகள் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடத் தினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின்  மடத்துக்குளம் தாலுகா செய லாளர் எம்.எம். வீரப்பன் தலைமை யில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. தாலுகா தலைவர் ராஜரத்தி னம், பொருளாளர் கடத்தூர் வெள் ளியங்கிரி, தென்னை விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் சிவராஜ், கரும்பு விவசாயிகள் சங்க தாலுகா பொருளாளர் கணேசன், போஸ் (எ) தர்மராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவர் அழ கேஸ்வரன், கமிட்டி உறுப்பினர் கள் ராமலிங்கம், ராமசாமி உட்பட  பிரதானக் கால்வாய் பாசனத்திற்குட் பட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.