tamilnadu

நாய் கடிக்கு 9 ஆயிரம் பேர் சிகிச்சை!

நாய் கடிக்கு 9 ஆயிரம் பேர் சிகிச்சை!

கோவை, ஆக.20- கோவை அரசு மருத்துவமனையில். கடந்த ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை,  நாய் கடித்த 9 ஆயிரத்து 738 பேர் சிகிச்சை  அளிக்கப்பட்டுள்ளது. தில்லியில் தெரு நாய் கடித்ததில் ஆறு  வயது சிறுமி உயிரிழந்தார். இதையடுத்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் நீதிபதிகள், தில்லியில் உள்ள தெருநாய்களை அகற்றி, காப்பகங்களில் வைக்க வேண்டும். நாய் களை பிடிக்க தனி நபர் அல்லது அமைப்பு கள் தடையாக இருந்தால் அவர்கள் மீது  நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்ப டும் உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்து தீர்ப்பு வழங்கினர். நாடு முழுவதும் இதற்கு  ஒரு தரப்பினர் எதிர்ப்பு, ஒரு தரப்பினர் ஆதர வும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலை யில், உச்ச நீதிமன்ற உத்தரவை தமிழ்நாட்டி லும் செயல்படுத்த வேண்டும் என்ற  கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்நாட்டில்  நாய்கடியால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்ட மாக சேலம் உள்ளது. கோவை மாவட்டத்தில் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. ஒவ் வொரு ஆண்டும் நாய் கடியால் 23 ஆயி ரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கோவை அரசு மருத் துவமனையில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட் டவர்கள் சிகிச்சை பெறுகின்றனர். கோவை  மாவட்டத்தில், உள்ள அனைத்து தெருக் களிலும் தெருநாய்களின் எண்ணிக்கை தொடர் பாக நடத்திய கணக்கெடுப்பின்படி, சுமார்  1,20,000 தெருநாய்கள் இருப்பது தெரியவந் துள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான ஏழு  மாதங்களில் கோவை அரசு மருத்துவமனை யில் நாய் கடியால் மொத்தம் 9 ஆயிரத்து 738 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களில் 8,902 பேர் வெளி நோயாளிகளாகவும், 836  பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற் றனர். இதுதவிர ஒன்பது பேர் ரேபிஸ் பாதிக் கப்பட்ட நாயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச் சைக்கு வந்தவர்களுக்கு சுமார் 9,000 டோஸ் ஏ. ஆர்.வி தடுப்பு செதுத்தப்பட்டுள்ளதாக மருத் துவர்கள் தெரிவித்துள்ளனர்.