tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

65.44 டன் வீட்டு கழிவுப்பொருட்கள் சேகரிப்பு

 கோவை, ஆக.3- கோவையில் பெரிய அளவிலான வீட்டு கழிவுப்பொருட் கள் சேகரிப்பு சிறப்பு முகாமில். சுமார் 65.44 டன் பொருட் கள் சேகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் பழைய படுக்கைகள், சோபாக்கள், மெத்தைகள், மேஜை, நாற்காலிகள் மற்றும் பிற பெரிய வீட்டு கழிவுப் பொருட்கள் ஆகியவற்றை முறையாக அகற்றும் வகையில் இரு தினங்கள் சிறப்பு சேகரிப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி சனியன்று நடைபெற்ற முகாமில்,  வடக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் சுமார் 9.89 டன் களும், தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் சுமார் 9.05  டன்களும், மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் சுமார்  19.70 டன்களும், மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்  சுமார் 18.55 டன்களும் மற்றும் கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் சுமார் 8.25 டன்களும் என சுமார் 65.44 டன் அள விற்கு பழைய படுக்கைகள், சோபாக்கள், மெத்தைகள், மேஜை, நாற்காலிகள் மற்றும் பிற பெரிய வீட்டு கழிவுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள் ளது.

பெண்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்தவருக்கு பொதுமக்கள் ‘தர்மஅடி’

தருமபுரி, ஆக.3- பேருந்தில் பயணித்த பெண்களை ஆபாச புகைப்படம் எடுத்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து ‘தர்மஅடி’ கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி பகுதியைச் சேர்ந்த வர் ராஜேந்திரன். இவர் ஞாயிறன்று ஒகேனக்கல் சென்று விட்டு, பென்னாகரம் பகுதிக்கு வந்து அப்பகுதியிலுள்ள சந்து  கடையில் மது வாங்கி குடித்து விட்டு, நகரப் பேருந்தில் ஏறி தரும புரிக்கு வந்துள்ளார். போதை தலைக்கேறியதால் பேருந்தில்  பயணம் செய்த இளம்பெண்களை ஆபாசமாக புகைப்படம்  எடுத்து, தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதை தட்டிக் கேட்ட சக பயணிகளையும் அவர் தரக்குறைவாக திட்டியுள் ளார். இதையடுத்து அவரை பிடித்து, பயணிகள் சரமாரியாக  தாக்கினர். தொடர்ந்து பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு  பணியிலிருந்த போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.