வெள்ளக்கோவிலில் 32 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
திருப்பூர், ஆக.27- அரசால் தடை செய்யப்பட்ட 32 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் செவ்வாயன்று வெள்ளக்கோவிலில் பறிமுதல் செய்யப் பட்டன. வெள்ளக்கோவில் பகுதியில் தடை செய் யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள், புகையிலைப் பொருட்கள், கலப்பட உணவுப் பொருட்கள் குறித்து பொது சுகாதாரத் துறை, உணவுப் பாதுகாப்புத் துறை, காவல் துறை, நகராட்சி நிர்வாகம் இணைந்து ஆய்வு மேற் கொண்டனர். இதில், முத்தூர் சாலை புதிய பேருந்து நிலைய கடைகளில் 32 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள், 10 கிலோ கலப்பட டீ தூள், புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மொத்தம் ரூ.5 ஆயிரம் அபரா தம் விதிக்கப்பட்டுள்ளது.
