தரமற்ற 250 கிலோ பழங்கள் பறிமுதல்
ரசாயனம் தெளித்தும், தரமற்ற வகையிலும் விற்ப னைக்காக வைத்திருந்த சுமார் 250 கிலோ பழங்கள் மற்றும் ரசாயனப் பொருட்களை உணவு பாதுகாப்புத் துறையி னர் பறிமுதல் செய்தனர். தருமபுரி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பழக்கடை கள், பழ மண்டிகளில் ரசாயனம் தெளித்து பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவதாக ஆட்சியருக்கு தக வல் கிடைத்தது. அதன்பேரில் நடவடிக்கை எடுக்கவும், அது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் ஆட்சியர் ரெ.சதீஷ், உணவு பாதுகாப்புத் துறையினருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கைலாஷ் குமார், நகராட்சி மற்றும் ஒன் றிய அலுவலர் நந்தகோபால் தலைமையிலான குழுவி னர், நகரப் பகுதிகளிலுள்ள பழக்கடைகள், பழ மண்டிக ளில் வியாழனன்று ஆய்வு செய்தனர். பேருந்து நிலையம், சந்தைப்பேட்டை, டவுன்ஹால், வெங்கட்ரமாச்சாரி தெரு, கந்தசாமி வாத்தியார் தெரு, பிடம னேரி சாலை, நேதாஜி புறவழிச்சாலை, சேலம் பிரதான சாலை, பாரதிபுரம், இலக்கியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளி லுள்ள பழக்கடைகள், பழ மண்டிகள், கிடங்குகள் மற்றும் பழ ரச விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்யப்பட்டது. இதில், டவுன்ஹால் பகுதியில் வாழைப்பழ மொத்த விற்பனை மண்டியில், எத்தியோப்பான் என்ற ராசயனம் மற்றும் தெளிப் பான் சாதனம் உள்ளிட்டவை வைத்திருந்தது கண்டறியப் பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல, பாரதிபுரம் 60 அடி சாலை அருகில் ஒரு பழக்கடையில் இருந்து ரசாயனம் மற்றும் ரசாயனப் பொருட் கள், நான்கு கடைகளில் ரசாயனம் கலந்த பழச்சாறு தயா ரிக்க வைத்திருந்த பழங்கள், அழுகிய நிலையில் இருந்த தர மற்ற ஆப்பிள், அன்னாசி, மாதுளை, சாத்துக்குடி, பப்பாளி உள்ளிட்ட பழங்கள் சுமார் 250 கிலோ பறிமுதல் செய்து அப்புறப்படுத்தப்பட்டன. இதையடுத்து, உணவுப் பாது காப்பு விதிமுறைகளை பின்பற்றாத கடை உரிமையா ளர்கள், 5 விற்பனையாளர்களுக்கு தலா ரூ.2,000 வீதம் ரூ.10,000, சிறு விற்பனையாளர்கள் 3 பேருக்கு தலா ரூ.1,000 வீதம் ரூ.3,000 என மொத்தம் ரூ.13,000 அபராதம் விதித்து எச்சரிக்கை ஆணை வழங்கப்பட்டது. இதனிடையே, டவுன் ஹால் பகுதியிலுள்ள பழ மண்டியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்து அவற்றை உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்து போலீசா ரிடம் ஒப்படைத்தனர்.
உரம் விற்க 6 கடைகளுக்கு தடை
சேலம், செப்.5- சேலம் மாவட்ட உர விற் பனை கண்காணிப்பு அலுவ லர் குழுவைச் சேர்ந்த வேளாண் உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) கவுதம் தலைமையில், தம்மம்பட்டி, கெங்கவல்லி, வீரகனூர் உள்ளிட்ட இடங்களிலுள்ள உரக்கடைகளில் அதிகாரி கள் ஆய்வு செய்தனர். அப் போது, இருப்பு வைத்து விற் காத 8 கடைகள், இருப்பு மற் றும் விற்பனை குறித்த தக வல் இல்லாத 7 கடைகள், உர விற்பனைக்கு உரிய அங் கீகாரம் இல்லாத 5 கடைக ளில் விதி மீறல் கண்டறியப் பட்டது. இவற்றில் தம்மம்பட் டியில் 1, கெங்கவல்லியில் 2, ஆணையம்பட்டியில் 1, வீரக னூரில் 2 என 6 கடைகளில் உரம் விற்க தடை விதிக் கப்பட்டது.