tamilnadu

img

தோழர் கே.எஸ்.கருப்பசாமி 16 ஆம் ஆண்டு நினைவஞ்சலி

தோழர் கே.எஸ்.கருப்பசாமி 16 ஆம் ஆண்டு நினைவஞ்சலி

திருப்பூர், அக். 7 - திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு தொழிற்சங் கத்தின் முன்னணித் தலைவராக திகழ்ந்த தோழர் கே.எஸ்.கருப்பசாமி யின் 16ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி கடைப்பிடிக்கப்பட்டது. திருப்பூர் அவிநாசி சாலை தியாகி  பழனிச்சாமி நிலையம் முன்பு நடை பெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகரச் செயலாளர் பா.சௌந்தரராசன் தலைமை வகித்தார். இதில் சிஐடியு  சுமைப்பணித் தொழிலாளர் சங்க மாவட் டத் தலைவர் எம்.ராஜகோபால், மார்க் சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர் கே.காமராஜ் ஆகியோர் தோழர் கே. எஸ்.கே.வின் பணிகளை நினைவு கூர்ந்து உரையாற்றினர். இதைத் தொடர்ந்து கட்சியின் மாவட்டச் செயலா ளர் சி.மூர்த்தி தோழர் கே.எஸ்.கே. உருவப்படத்திற்கு மலர் தூவி நினை வஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் பங் கேற்ற அனைவரும் மலரஞ்சலி செலுத் தினர். தெற்கு மாநகர்: வெள்ளியங்காடு நால் ரோடு பகு தியில் நடைபெற்ற நினைவு அஞ்சலி நிகழ்ச்சிக்கு சுந்தரம் தலைமை வகித் தார். தெற்கு மாநகரச் செயலாளர் த.ஜெய பால், தெற்கு மாநகரக்குழு உறுப்பினர்,  த.ஆறுக்குட்டி, தமுஎகச நிர்வாகி வேலா இளங்கோ, தி.சா.குப்புசாமி ஆகியோர் நினைவு கூர்ந்து பேசினர். அதேபோல் தென்னம்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு நகரக்குழு உறுப்பினர் சஞ்சீவன் தலைமை வகித்தார். தென்னம்பாளையம் முன் னாள் கிளைச் செயலாளர் துரைசாமி, தி.சா குப்புசாமி, தமுஎகச நிர்வாகி கோவிந்தராஜ் உள்ளிட்டோர் தோழர் கே.எஸ்.கே வை நினைவு கூர்ந்து பேசி னர். அனுப்பர்பாளையத்தில் நடை பெற்ற அஞ்சலி நிகழ்ச்சிக்கு அ.ஆறு முகம் தலைமை வகித்தார். இதில்,  நகரச் செயலாளர் ச.நந்தகோபால், அ. கணேசன், அ.புதூர் ஏ.பி.ரஜேந்திரன் ஆகியோர் தோழர் கே.எஸ்.கே குறித்து பேசினர்.  அவிநாசி: புதுப்பாளையம் ஊராட்சிக்குட் பட்ட சௌடாம்பிகை நகர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வஞ்சிபா ளையம் பகுதி கிளை அலுவலகம் முன்பு  தோழர் கே.எஸ்.கே நினைவு தினம் கடை பிடிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் சிஐடியு  மாநிலக் குழு உறுப்பினர் முத்துசாமி நினைவு கூர்ந்து பேசினர். அதேபோல் திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட அம்மாபாளையம் கிளை அலுவலகம் முன்பு நடைபெற்ற நினைவு தின நிகழ்ச்சியில், கட்சியின் ஒன்றியக் குழு  உறுப்பினர் பாலசுப்பிரமணியம் பேசி னார்.